NEWS UPDATE *** அரசுப் பணியாளர்களுக்கான அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். *** ஆழ்துளை கிணற்றை தடை செய்ய கோரி சமூக நீதி மாணவர் இயக்கம் சார்பில் மனு

ஆழ்துளை கிணற்றை தடை செய்ய கோரி சமூக நீதி மாணவர் இயக்கம் சார்பில் மனு

 திருச்சி மாவட்டம் ஶ்ரீரங்கம் தொகுதி இனாம்குளத்தூர் பகுதியில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் இயங்கி வருகிறது.. இந்த நிறுவனத்தில் மிக பிரம்மாண்டமான ஆழ்துளை கிணறு அமையவுள்ளது.. 


ஏற்கனவே அந்த பகுதியில் நிறைய ஆழ்துளை கிணறு உள்ளது.. இதனால் இனாம்குளத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தண்ணீர் பஞ்சம், நிலத்தடி நீர் மட்டம் குறைவு போன்ற பல பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது.. மேலும் புதிதாக ஏற்படும் ஆழ்துளை கிணறு காரணமாக மேலும் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் அமைய இருக்கும் புதிய ஆழ்துளை கிணற்றை தடை செய்ய கோரி தமுமுக மாணவர் அமைப்பான சமூக நீதி மாணவர் இயக்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.. இந்த நிகழ்வில் சமூக நீதி மாணவர் இயக்கம் மாநில துணை செயலாளர் மற்றும் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் மாவட்ட துணை செயலாளர் ஹுமாயூன் கபீர் ஆகியோர் கலந்து கொண்டனர்

Post a Comment

0 Comments