திருச்சி மாநகர் பகுதியில் அமைந்துள்ள இப்ராஹீம் பூங்கா பிரசித்து பெற்ற பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்தபடும் பூங்காவாகும்....
திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் அலுவலகத்தின் அருகே இப்ராஹீம் பூங்கா செயல்பட்டு வருகிறது
இந்த பூங்கா பராமரிப்பு என்பது திருச்சி மாநகராட்சி கட்டுப்பாடில் உள்ளது.. பூங்காவில் சிறியவர்கள் மற்றும் குழந்தைகள் விளையாடுவதற்கு பயன்படுத்து விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் மிகவும் சேதமடைந்தது காணப்படுகிறது.
திருச்சி மாநகர மக்களுக்கு காவேரி மேம்பாலம் , இப்ராஹிம் பார்க். அண்ணா நகர் அறிவியல் பூங்கா இதை விட்டால் சினிமா தியேட்டர்கள் இவைகளைத் தவிர வேறு எந்த விதமான பொழுதுபோக்கு அம்சங்களும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது
இந்த பூங்காவில் குறைந்த அளவிலான கட்டணங்களை வசூல் செய்துவிட்டு உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.. திருச்சி மாநகராட்சி கட்டுப்பாடில் உள்ள இப்ராஹீம் பூங்காவில் சேதமடைந்து விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் சீரமைக்கவும்.. பராமரிப்பு பணிகள் நடைபெறும் போது பொதுமக்கள் உள்ளே அனுமதிக்காமல் பூங்காவை நல்ல முறையில் சீரமைத்து பொதுமக்களை உள்ளே அனுமதிக்குமாறு தமிழக அரசுக்கும், திருச்சி மாநகராட்சி நிர்வாகத்திற்க்கும் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் ராயல் சித்திக் கோரிக்கை வைத்துள்ளார்.
0 Comments