// NEWS UPDATE *** ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு. அதிமுக - பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் +++++++++++++++++++++++ பிகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை *** SDPI கட்சி திருச்சி தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம்

SDPI கட்சி திருச்சி தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம்

 SDPI கட்சி திருச்சி தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் கே முபாரக் அலி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இதில் மாவட்ட பொது செயலாளர் தமீம் அன்சாரி அவர்கள் முன்னிலை வகித்தார்கள்.

மாவட்ட செயலாளர் ஏர்போர்ட்.மஜீத் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.

இக்கூட்டத்தில் சமகால அரசியல் சூழ்நிலைகளை பற்றியும், திருச்சி மாநகராட்சி முழுவதும் மக்கள் சந்திக்க கூடிய பிரச்சனைகளை பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது.




இதில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1.திருச்சி மாநகராட்சி முழுதும் மின் அளவீடு குறைபாடுகளை களைய வேண்டும்.

2.புதிய மின் மீட்டர் அமைக்க விண்ணப்பித்தும் தாமதம் செய்யும் மின்வாரிய துறை துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3.மாநில செயற்குழுவிற்கு திருச்சிக்கு வருகை தரும் தேசிய தலைவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும்.

இதில் மாவட்ட,தொகுதி,அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இறுதியாக தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி அப்பாஸ் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்

Post a Comment

0 Comments