BREAKING NEWS *** "அளவற்ற வறுமையைத் தாண்டினார் எம்.ஜி.ஆர்" "கூத்தாடி என்ற கூற்றைச் சுக்குநூறாக உடைத்து, தமிழக அரசியல் வரலாற்றின் மையம் ஆனார்" "தமிழக அரசியலின் அதிசயம் ஆனார் எம்.ஜி.ஆர்" "இறந்தும் வாழும், புரட்சித் தலைவருக்குப் பிறந்தநாள் வணக்கம்" -த.வெ.க தலைவர் விஜய் *** இனாம்குளத்தூர் அரசு பள்ளி கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை

இனாம்குளத்தூர் அரசு பள்ளி கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை

 திருச்சி ஶ்ரீரங்கம் தொகுதி இனாம்குளத்தூர் ஊராட்சி ஒன்றிய ஆண்கள் தொடக்கப்பள்ளி உள்ளது...இந்த பள்ளியில் புதிய வகுப்பறை கட்டுமான பணி நடைபெற்று வருகிறது . பள்ளி வகுப்பறை கட்டுமான பணியில் அஸ்திவாரம் அமைப்பதற்காக ஆழமான பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளது.




மாணவர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.பள்ளி நேரம் முடிந்து வீட்டிற்கு செல்லும் மாணவர்கள் போதிய பாதுகாப்பு இல்லாமல் கட்டுமான பணி மற்றும் ஆழமான பள்ளங்களை கடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது... 




இனாம் குளத்தூர் ஊராட்சி ஒன்றிய ஆண்கள் தொடக்கப்பள்ளி நிர்வாகம் ஒப்பந்ததாரர்கள் முறையிட்டு கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க கோரியும் பள்ளங்களை சுற்றி தடுப்புகளை அமைத்து பாதுகாப்பான சூழல் ஏற்படுத்த கோரியும் பொதுமக்கள் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments