// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** காவேரி மேலாண்மை வாரியம் கோரி போராட்ட வழக்கு - அனைவரும் விடுதலை

காவேரி மேலாண்மை வாரியம் கோரி போராட்ட வழக்கு - அனைவரும் விடுதலை

2018 ஏப்ரல் மாதம் திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள மாணவர் சாலையில் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், காவேரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்றக் கோரிக்கைகளை  வலியுறுத்தி திருச்சி மாவட்டத்தில் மாணவர்கள்,  இளைஞர்கள் தன்னெழுச்சியாக கூடி மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுத்தனர். 




இதில் தொடர்ந்து அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தை சேர்ந்த ஜி.ஆர்.தினேஷ்குமார், க.இப்ராஹிம், சமூக ஆர்வலர் நடிகர் சாய் வினோத் உள்ளிட்ட 15 பேர் கைது செய்யப்பட்டு 8 நாள் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். பிறகு வெளியே வந்து வழக்கு தொடர்ந்து முன்னெடுத்து நடத்தி வந்தனர். இந்த நிலையில் 22.2.2023 இன்று திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட 15 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து மாணவர்கள், இளைஞர்கள் சார்பாக கைது செய்யப்பட்ட நாள் முதல் அன்று முதல் இன்று வரை எவ்வித கட்டணமும் வசூலிக்காமல் தொடர்ந்து வாதாடி வழக்கை வெற்றி பெற்ற வைத்த வழக்கறிஞர் ப.முருகானந்தம் மற்றும் எம்.செல்வகுமார், சதாம் உசேன், ஏ.சுகன்யா மேரி, ஜி.செபாஸ்டின் ஆனந்த், ஆர்.பிரசாந்த், ஆ.வடிவேலு, செல்வம், கனிமொழி, மனோஜ் குமார், நடராஜன் உள்ளிட்ட வழக்கறிஞர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. 



இந்த வழக்கில் மாணவர்கள் இளைஞர்கள் கைது செய்யப்பட்டது முதல் விடுதலை வரை தொடர்ந்து வழக்கை முன்னெடுத்த வழக்கறிஞர் ப.முருகானந்தத்தின் பணி  அளப்பரியது அவர்களுக்கு அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் தமிழ்நாடு மாநில குழுவின் சார்பில் புரட்சிகர வாழ்த்துக்கள்.

Post a Comment

0 Comments