// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** திருச்சியில் 92 ஆயிரம் பேப்பர் கப் மூலம் பிரம்மாண்ட தேசியக்கொடி அமைத்து புதிய உலக சாதனை

திருச்சியில் 92 ஆயிரம் பேப்பர் கப் மூலம் பிரம்மாண்ட தேசியக்கொடி அமைத்து புதிய உலக சாதனை

 திருச்சி காஜாமலை அல்-ஜமீஅத்துஸ் சாதிக் மெட்ரிக் பள்ளியில்  நாட்டின் 75வது சுதந்திர ஆண்டினைக் கொண்டாடும் விதமாகவும், மாணவ மாணவிகளின் கல்வி மற்றும் தனித் திறமைகளை நிரூபிக்கும் விதமாகவும் பள்ளியின் 30ம் ஆண்டு விழாவினை கொண்டாடும் வகையில்  மிகவும் பிரமாண்டமான ஓர் உலக சாதனை படைத்துள்ளனர். 

"காகிதக்கோப்பைகளால் உருவாக்கப்படும் உலகின் மிகப் பெரிய தேசியக் கொடி குழு" (The Largest National Flag Made with Paper Cups by a Team) எனும் உலக சாதனையைப் படைத்துள்ளனர்.

பள்ளியில் பயிலும் 340 மாணவ, மாணவிகள் 22 ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் இதர பள்ளி மாணவர்கள் பங்களிப்புடன் இந்த சாதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 



பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் இந்த பேப்பர் கப்பினை அடுக்கி வைத்து தேசிய கொடியை தயார் செய்தனர்




இந்த மாபெரும் உலகசாதனை நிகழ்வினை எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் மற்றும் இந்தியா ரெக்கார்ட்ஸ் அகாடமி ஆகிய 2 உலக சாதனை நிறுவனங்களின் ஆய்வாளர்கள் நேரில் வந்து கலந்து கொண்டு ஆய்வு செய்து சான்றளிக்க அளித்தனர்.


இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளியின் தாளாளர் முகமது ஆரிப், செயலாளளர்  அஹமதுல்லாஹ், பள்ளியின் முதல்வர் ஜோஷ்பின் ஸ்டெல்லா செய்திருந்தனர்.

Post a Comment

0 Comments