// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** திருச்சி தேசிய கல்லூரியில் வணிகவியல் பேரவை கூட்டம்

திருச்சி தேசிய கல்லூரியில் வணிகவியல் பேரவை கூட்டம்

 திருச்சி, தேசியக் கல்லூரியின் வணிகவியல் துறை சார்பாக வணிகவியல் பேரவைக் கூட்டம் கல்லூரி கூட்ட அரங்கில் நடைபெற்றது. முனைவர் ஆர். சுந்தரராமன் தலைமை உரையாற்றினார். திருச்சி, சாரநாதன் பொறியியல் கல்லூரியின் மேலாண்மைத் துறையின் தலைவர் முனைவர் கே. கார்த்திகேயன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.



அவர் பேசுகையில், வாழ்க்கையில் பயப்படக் கூடாது என்றும், எதையும் தைரியமாக எதிர் கொள்ள வேண்டும் என்றும், ஆங்கிலப் புலமையை வளர்த்து கொள்ள வேண்டும் என்றும், வேலைக்காக நேர்காணலில் தைரியமாகப் பேச வேண்டும் என்றும் கூறினார். மேலும், ஒவ்வொரு நாள் காலையில் அன்றைய வேலையை முடிவு செய்து கொண்டு, இரவு படுக்கும் பொழுது என்ன வேலையை முடித்துள்ளோம் என்று பார்க்க வேண்டும் என்றும், முடிக்காத வேலைக்கான காரணத்தைக் கண்டறிந்து சரி செய்து கொள்ள வேண்டும் என்றும், நேரத்தை வீணாக்கக் கூடாது என்றும் அறிவுரை வழங்கினார். கூட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் முனைவர் எம். சவேரியர் துரைசாமி செய்தார். திரளான பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.


நிருபர் ரூபன் 

Post a Comment

0 Comments