// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** திருச்சி தேசிய கல்லூரியில் வணிக நிர்வாக துறை பேரவை கூட்டம்

திருச்சி தேசிய கல்லூரியில் வணிக நிர்வாக துறை பேரவை கூட்டம்

 திருச்சிராப்பள்ளி தேசியக் கல்லூரியில் வணிக நிர்வாக துறை சார்பாக பேரவை நிறைவு கூட்டம் இன்று நடைபெற்றது..

இந்த பேரவை நிறைவு கூட்டத்தின் சிறப்பு விருந்தினராக TIME நிர்வாக இயக்குனர் திரு சி எஸ் மணி அவர்கள் "எதிர்கால பார்வையில்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். மேலும் தேசியக் கல்லூரி முதல்வர் முனைவர் கி குமார் மற்றும் துணை முதல்வர் பிரசன்ன பாலாஜி அவர்கள் இக்கூட்டத்திற்கு தலைமை உரையாற்றினார்கள். 



வணிக நிர்வாக துறை தலைவர் முனைவர் ஆர் திருஞானசௌந்தரி வரவேற்புரை வழங்கினார். செல்வி சுபத்ரா மற்றும் அபிராமி ஆகியோர் பேரவையின் ஆண்டு அறிக்கையை தாக்கல் செய்யதனர். இந்நிகழ்ச்சிக்கு வணிக நிர்வாக துறை உதவி பேராசிரியர் முனைவர் எம் சந்திரா அவர்கள் நன்றியுரை வழங்கினார்.

நிருபர் ரூபன்

Post a Comment

0 Comments