BREAKING NEWS *** டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்க கோரிய பொதுநல மனு தள்ளுபடி மனுதாரருக்கு ரூ.75 ஆயிரம் அபராதம் விதித்து தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம் *** திருச்சி தேசியக் கல்லூரியில் வலைப்பூ உருவாக்கம் குறித்த பயிலரங்கம்

திருச்சி தேசியக் கல்லூரியில் வலைப்பூ உருவாக்கம் குறித்த பயிலரங்கம்

திருச்சி தேசியக்கல்லூரியின் தமிழ்த்துறையும் கணினி அறிவியல்

துறையும் சென்னை தமிழ் இணையக் கல்விக்கழகத்துடன் இணைந்து நடத்திய ‘வலைப்பூ வரலாறும் பயன்பாட்டு நிலையும்' என்னும்  பயிலரங்கம்  கல்லூரி நூலக அரங்கில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்குக் கல்லூரி முதல்வர் முனைவர் கி. குமார் தலைமை தாங்கினார்.தொடர்ந்து பேசும்போது :- கணித்தமிழ்ப் பேரவையின் நோக்கங்களையும், அதனால் மாணவர்களுக்கு உள்ள பயன்களையும் விவரித்தார்.


இந்நிகழ்வில் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரித் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் மு. முனீஸ் மூர்த்தி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மாணவர்களுக்கு இணையத்தமிழ்ப் பயிற்சியை வழங்கினார். பல்துறை அறிவைப் பெறுவதற்கு

வலைப்பூக்கள் பிளாக்ஸ் (Blogs) எந்த அளவிற்கு உறுதுணையாக உள்ளன என்பதுடன்,

மாணவர்கள் தங்கள் படைப்புகளை உலகிற்கு வழங்க வலைப்பூப் பக்கம் எப்படி உதவுகிறது என்பதையும் விளக்கினார். புதிய வலைப்பக்கத்தை உருவாக்கிக் கொள்ளும்முறை, அதன் அமைப்புமுறை வசதிகள், தமிழ்த் தரவுகளைப் பதிவேற்றம்

செய்தல் போன்றவற்றைப் பயிற்றுவித்தார். தமிழ் மற்றும் கணினி அறிவியல் துறை

மாணவர்களைக் கணினிகளுக்கு முன் அமரச்செய்து செயல்முறைப் பயிற்சியையும்


வழங்கினார். மாணவர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. மாணவர்கள் தங்கள்


ஐயங்களையும் அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டார்கள்.


இந்நிகழ்ச்சியைக் கணித்தமிழ்ப் பேரவையின் ஒருங்கிணைப்பாளர்களான தமிழ்

உதவிப்பேராசிரியர் முனைவர் இரா. இராஜா மற்றும் கணினி அறிவியல் துறைத்தலைவர் முனைவர் பி.எஸ்.எஸ். அகிலாஸ்ரீ ஆகியோர் ஏற்பாடு செய்து  அனைவரையும் வரவேற்று நன்றி கூறினார். இந்நிகழ்வில் தமிழ்த்துறைத் துணைத்தலைவர் முனைவர் மாணிக்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


நிருபர் ரூபன் 

Post a Comment

0 Comments