// NEWS UPDATE *** தனது வாழ்க்கை அனுபவங்களை சுயசரிதையாக எழுதும் நடிகர் ரஜினிகாந்த்.. பல ஆண்டுகளாக பேசப்பட்ட இந்த முயற்சி இப்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.. மைசூரில் தங்கி புத்தகத்தை எழுதுவதில் கவனம் செலுத்தி வரும் ரஜினி, இந்த ஆண்டுக்குள் புத்தகத்தை வெளியிட திட்டம்.. *** நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள்களுக்கு விருது வழங்கும் விழா

நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள்களுக்கு விருது வழங்கும் விழா

 2021-2022 ஆம் ஆண்டிற்கான பாரதிதாசன் பல்கலைக்கழக அளவிலான சிறந்த நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்க்கான விருது வழங்கும் விழா  பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. 


பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் செல்வம், பதிவாளர் கணேசன், சென்னை மண்டல நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் சாமுவேல் செல்லையா, தமிழ்நாடு மாநில நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் செந்தில்குமார், பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் இலக்குமிப்பிரபா ஆகியோர் இவ்விழாவில் பங்கேற்றுச் சிறப்பித்தனர். 



இவ்விழாவில் திருச்சிராப்பள்ளி தேசியக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் ச.கருத்தான் 2021-2022ஆம் ஆண்டிற்கான சிறந்த நாட்டு நலப்பணித்திட்ட அலுவலருக்கான விருதினைப் பெற்றார்.

நிருபர் ரூபன்

Post a Comment

0 Comments