// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த அச்சக சங்கத்தில் உலக மகளிர்தின விழா

திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த அச்சக சங்கத்தில் உலக மகளிர்தின விழா

திருச்சி மாவட்டம் அல்லிமால் தெருவில் உள்ள திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த அச்சக சங்கத்தில் உலக மகளிர் தின விழா அதன் தலைவர் வள்ளியப்பன் தலைமையில் நடைபெற்றது.


விழாவில் பாலாஜி இன்ஸ்டிடியூட் ஆப் கிராபிக்ஸ் நிறுவனர் வீரநாதன் கணினியும் மகளிரும் என்ற தலைப்பில் அச்சக துறை சார்ந்த மகளிர்க்கு சிறப்புரை வழங்கினார்.

திருச்சி மாவட்ட மாதர் சங்க செயலாளர் சரஸ்வதி  மகளிர் மேம்பாடு குறித்த விழிப்புணர்வு உரையாற்றினார்.


திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த அச்சக சங்கத்தின் மகளிர் அணி செயற்குழு உறுப்பினர் கலைச்செல்வி வாழ்த்துரை வழங்கினார்.



நிகழ்ச்சியில் அச்சகத்துறையில் சாதித்து வரும் மகளிர்க்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.

முன்னதாக சங்கத்தின் செயலாளர் மோகன் அனைவரையும் வரவேற்றார். பொருளாளர் அப்பாஸ் நன்றி கூறினார்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

Post a Comment

0 Comments