NEWS UPDATE *** அரசுப் பணியாளர்களுக்கான அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். *** அயன் பட பாணியில் போதை பொருள் கடத்தல்

அயன் பட பாணியில் போதை பொருள் கடத்தல்

 மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் நடத்திய சோதனையில் அயன் திரைப்பட பாணியில் போதைப்பொருள் கடத்திய இருவரை கைது செய்துள்ளனர்.ஆப்பிரிக்காவின் லாகோஸ் நகரில் இருந்து எத்தியோப்பியா வழியாக மும்பை வந்த இரு நைஜீரியா இளைஞர்களை சந்தேகத்தின் பெயரில் விமான நிலையத்தின் வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் வழிமறித்து அவர்களை சோதனை செய்தனர்.ஆனால் அவர்கள் கொண்டுவந்த பைகளில் எந்தவித போதைப்பொருளும் இல்லை. இருந்தும் அவர்கள் உடலில் மறைத்து வைத்திருப்பார்களோ என்ற சந்தேகத்தில் அவர்களுக்கு மருத்துவ சோதனை நடைபெற்றது.


அதில் சுமார் 30 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள்களை அவர்கள் வயிற்றில் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.. மேலும் இது போன்ற சம்பவங்களில் தொடர்பு உள்ளதா என விசாரித்து வருகின்றனர்..அவர்கள் இருவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments