BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் சமூக வலைதளங்களின் பாதிப்புகள் மற்றும் தீர்வுகள் நுகர்வோர் உரிமை குறித்த விழிப்புணர்வு கலந்துரையாடல் மற்றும் கருத்து பரிமாற்றம் நிகழ்ச்சி

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் சமூக வலைதளங்களின் பாதிப்புகள் மற்றும் தீர்வுகள் நுகர்வோர் உரிமை குறித்த விழிப்புணர்வு கலந்துரையாடல் மற்றும் கருத்து பரிமாற்றம் நிகழ்ச்சி

திருச்சி அரசு மருத்துவமனை பின்புறம் வயலூர் சாலை பகுதியில் உள்ள பிஷப் ஹீபர் கல்லூரியில் உள்ள கூட்டரங்கில்  இன்னர் வீல் கிளப் ஆப் திருச்சி மலை கோட்டை சார்பில் இரண்டு தலைப்புகளில் மாணவ மாணவிகள் உடன் கலந்துரையாடல் மற்றும் கருத்து பரிமாற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது...




இந்விகழ்வில் முதல் கலந்துரையாடல் நிகழ்ச்சியாக சமூக வலைதளங்களில்  தாக்கம் இதில் மாணவ மாணவிகள் சந்திக்கும் பிரச்சனைகள்   மற்றும் அதற்கான தீர்வுகள் சமூக வலைதளங்களில் உள்ள சாதக பாதகங்கள் பிரச்சனைகள் மற்றும்  தீர்வுகள் என்கிற தலைப்பில் சிறப்பு விருந்தினராக Rtn.V.நாகராஜன் நிறுவனர் Excel IAS Academy நிர்வாக இயக்குனர் Phoenix Academy அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றி மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடினார்...








இந்நிகழ்வில் இரண்டாவது நிகழ்வாக சிறப்பு அழைப்பாளர்களில் ஒருவராக அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் மாற்றம் அமைப்பின் நிர்வாகியும் நடிகருமான ஆர்.ஏ.தாமஸ் அவர்கள் கலந்து கொண்டு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் உரிமை என்கிற தலைப்பில் உரையாற்றி மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடினார்...









இந்நிகழ்வில் திருச்சி மற்றும் சென்னையில் தமிழக அரசு சார்பில் நடைபெற்ற உணவு திருவிழா சார்பில் நடைபெற்ற குறும்பட போட்டியில் முதல் பரிசை வென்ற என் கடமை உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு குறும்படம் ஒளிபரப்பு செய்யப்பட்டது..







இந்நிகழ்வில் இன்னர் வீல் கிளப் ஆப் திருச்சி மலை கோட்டை அமைப்பின் தலைவர் திருமதி.கவிதா நாகராஜன் அமைப்பின் கல்வி சேவை மண்டல ஒருங்கிணைப்பாளர் திருமதி. ஆண்ட்ரூஸ் மேரிசேகர் செயலாளர் மீனா சுரேஷ் மற்றும் பேராசியர்கள்  முனைவர்.  D.ஞானராஜ் பேராசிரியை நஸ்ரின் ஹுசைனா பேராசிரியர் முனைவர் இளையராஜா மற்றும் திரளான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்

Post a Comment

0 Comments