BREAKING NEWS *** இரட்டை இலை சின்னத்தை முடக்குங்கள்.. எனக்கு பக்கெட் சின்னம் கொடுங்கள்.. ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்தில் மனு! *** தமிழ் மற்றும் பிற மொழியிலும் பெயர் பலகை அமைக்க வலியுறுத்தி துண்டு பிரசுரம் விநியோகம்

தமிழ் மற்றும் பிற மொழியிலும் பெயர் பலகை அமைக்க வலியுறுத்தி துண்டு பிரசுரம் விநியோகம்

 தமிழ்வளர்ச்சித் துறை அரசாணையின் படியும்,  திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப்குமார். திருச்சிராப்பள்ளி மாவட்ட தமிழ்வளர்ச்சித் துறை துணை இயக்குநர் மற்றும் திருச்சிராப்பள்ளி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் ஆகியோரின் அறிவுரைகளின்படியும் திருச்சிராப்பள்ளி மாவட்டம், காட்டுப்புத்தூர் தேர்வுநிலை பேரூராட்சியில்  ஆட்சி மொழியான தமிழ் மொழியினை சிறப்பாக செயல்படுத்தும் பொருட்டு பேரூராட்சி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு அலுவலகங்கள், கடைகள், வணிக நிறுவனங்கள், மதவழிபாட்டு தளங்கள் ஆகியவற்றில் 50 சதவீதம் தமிழிலும், 30 சதவீதம் ஆங்கிலத்திலும் மற்றும் 20 சதவீதம் பிறமொழியிலும் அமையும் விதத்தில் பெயர் பலகை அமைப்பதற்கு செயல் அலுவலர் திரு.ச.சாகுல் அமீது அவர்களின் தலைமையிலும், பேரூராட்சி மன்ற தலைவர் திருமதி. சு.சங்கீதா மற்றும் துணைத்தலைவர் திருமதி.சி.சுதா ஆகியோரின் முன்னிலையிலும் பேரூராட்சி பகுதியில் உள்ள அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள், வங்கிகள், வணிக நிறுவனங்கள், பள்ளிகள், கடைகள், மதவழிபாட்டு தளங்கள், மருந்து கடைகள், திரையரங்கம், ஜவுளி கடைகள், பாத்திர கடைகள், உணவகங்கள் ஆகியவற்றிக்கு நேரில் சென்று அறிவிப்பு கடிதம் வழங்கினர்..


உரிய விதிமுறைகளின் படி பெயர் பலகை, நிறுவனங்களின் விளம்பர பலகைகள் மற்றும் பொதுமக்களுக்கான அறிவிப்புகள் ஆகியவற்றை அரசு அறிவித்துள்ளவாறு தமிழ் ஆட்சி மொழிச் சட்டத்தை முழுமையாக மற்றும் சிறப்பாக செயல்படுத்திட  தெரிவிக்கப்பட்டது....



இந்நிகழ்வில் இளநிலை உதவியாளர்கள் இராஜேந்திரன், சித்ரா, பாரதியார், பணி மேற்பார்வையாளர் கண்ணன் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.

Post a Comment

0 Comments