NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** தமுமுக - மமக திருச்சி மேற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம்

தமுமுக - மமக திருச்சி மேற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம்

 தமுமுக மமக திருச்சி மேற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்  மாவட்ட தலைவர் பைஸ் அகமது தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட செயலாளர்கள் இப்ராஹிம்ஷா, திருச்சி இப்ராஹிம் பொருளாளர் ஹூமாயூன் கபீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


வருகிற 12.03.2023  அன்று தமுமுக மமக திருச்சி மேற்கு மாவட்ட செயற்குழு வை நடத்துவது என்றும்,

19.03.2023 அன்று மாலை 'ரமலானே வருக' என்ற தலைப்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

முன்னதாக  புதிதாக நியமனம் செய்யப்பட்ட மமக மாவட்ட துணை செயலாளர் இம்ரான், விளையாட்டு அணி செயலாளர் ஒத்தைமினாரா இசாக், விழி மற்றும் மனிதவள மேம்பாட்டு அணி செயலாளர் ஜுபைர் ஆகியோரை மாவட்ட நிர்வாகிகளுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் மாவட்ட தலைமை நிர்வாகிகள் துணை மற்றும் அணிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்‌.

Post a Comment

0 Comments