// NEWS UPDATE *** ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு. அதிமுக - பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் +++++++++++++++++++++++ பிகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை *** தெரு நாய் மற்றும் வெறி நாய்களிடமிருந்து பொதுமக்களை பாதுகாக்க கோரி - SDPI கட்சி ஆர்பாட்டம்

தெரு நாய் மற்றும் வெறி நாய்களிடமிருந்து பொதுமக்களை பாதுகாக்க கோரி - SDPI கட்சி ஆர்பாட்டம்

திருச்சியில் SDPI கட்சி சார்பாக பல முறை மனு அளித்தும் தெரு நாய்களை கட்டுப்படுத்தாத திருச்சி மாநகராட்சி  நிர்வாகத்தை கண்டித்து  SDPI கட்சி ஆழ்வார் தோப்பு கிளை சார்பாக கிளை தலைவர் அப்துல் ரஹ்மான் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


தொண்டரணி மாவட்ட செயலாளர் ஆரிப் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.

மாவட்ட பொருளாளர் பக்ருதீன் மேற்கு தொகுதி துணை தலைவர் KSA.ரியாஸ் மற்றும் தொகுதி செயலாளர் K.முஹம்மது சலீம்,ஊடக அணி மாவட்ட செயலாளர் உபைதூர் ரஹ்மான் ஆகியோர்கள்  முன்னிலை வகித்தனர்.






இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி.அப்பாஸ் மற்றும் மேற்கு தொகுதி தலைவர் சிராஜ் ஆகியோர்கள் கலந்து கொண்டு தெரு நாய்களை கட்டுப்படுத்தக் கோரியும்,பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரியும் கண்டன உரையாற்றினார்கள்.


இறுதியாக கிளை செயலாளர் இரும்புக் கடை முஸ்தபா அவர்கள் நன்றியுரையாற்றினார்.

Post a Comment

0 Comments