BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** பாரா தடகள போட்டியில் அகில இந்திய மக்கள் உரிமை மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் மற்றும் மாற்றம் அமைப்பு சார்பில் பாராட்டு

பாரா தடகள போட்டியில் அகில இந்திய மக்கள் உரிமை மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் மற்றும் மாற்றம் அமைப்பு சார்பில் பாராட்டு

திருச்சியில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் மற்றும் மாற்றம் அமைப்பின் சார்பில் சமீபத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற 21வது  தேசிய அளவிலான பாரா தடகள போட்டியில் 1500 மீட்டர் சக்கர நாற்காலி ஓட்டத்தில் (wheelchair racing) போட்டியில் கலந்து கொண்டு தங்கம் வென்ற திருச்சி மாவட்டம் தொட்டியத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர் ரமேஷ் அவர்களுக்கும் தமிழக அரசு சார்பில் நடைபெற்ற இல்லம் தேடி கல்வி குறும்பட போட்டியில் முதல் பரிசை பெற்ற ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த இந்திய குமார் அவர்களுக்கும்  நினைவு பரிசு பாராட்டு சான்று மற்றும் வாழ்த்துக்கள் தெரிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது ...



அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் கெளரவ தலைவரும் முன்னாள் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியுமான  நீதியரசர் எம்.கற்பகவிநாயகம் அவர்களின்  வழிகாட்டுதலின்படியும் அமைப்பின் நிறுவனர் & தலைவர் ஆர். கே. குமார் மற்றும் பொதுச்செயலாளர் முனைவர் வி. எச்.சுப்ரமணியம் அவர்களின் ஆலோசனை படியும் திருச்சி கண்டோன்மென்டில் இந்நிகழ்வு நடைபெற்றது  மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் கடந்த மார்ச்  மாதம் 16 முதல் 20 ம் தேதி வரை  தேசிய அளவிலான பாரா தடகள போட்டிகள் நடைபெற்றது..



இப்போட்டியில் பல்வேறு மாநிலத்தில் இருந்து விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர் தமிழகத்தில் இருந்து பல்வேறு பிரிவுகளில் விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர் இதில் திருச்சி மாவட்டம் தொட்டியத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர் ரமேஷ் அவர்கள் 1500 மீட்டர் சக்கர நாற்காலி ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டு தங்கம் வென்று தமிழகத்திற்கும் திருச்சி மாவட்டத்திற்க்கும் பெருமை சேர்த்துள்ளார்..



அவருடைய இந்த வெற்றியை பாராட்டும் வகையிலும்  சென்னையில் தமிழக அரசு சார்பில் இல்லம் தேடி கல்வி மையம் நடத்திய குறும்பட போட்டியில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த இந்திய குமார் அவர்கள் எடுத்த  சுற்றுச்சூழல் நம் கையில் என்கிற குறும்படம் மாநில அளவில் முதல் பரிசை பெற்றது இந்த வெற்றிக்காக அவருக்கும் அமைப்பின் சார்பில் பொன்னாடை அனிவித்து நினைவு பரிசு மற்றும் பாராட்டு சான்று வழங்கி வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது



  இந்திய குமார் அவர்கள் கடந்த 2019 ம் ஆண்டு இயக்கிய மண் இயற்கை உரம் குறித்த விழிப்புணர்வு குறும்படத்தை அப்போதைய புதுச்சேரி முதல்வர் திரு. V. நாராயணசாமி அவர்கள் வெளியிட்டு சிறப்பித்தார் என்பது குறிப்பிடதக்கது




இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் மற்றும் மாற்றம் அமைப்பின் நர்வாகிகளான கொளரவ தலைவரும் சட்ட ஆலோசகரான வழக்கறிஞர் எஸ். அண்ணாதுரை  பொதுச்செயலாளரும் திருச்சி மாவட்ட தலைவருமான Er. செந்தில்குமார்   வழக்கறிஞர் ஜெ. கிருஷ்ணமூர்த்தி வழக்கறிஞர் ஆறுமுகம் அமைப்பின் விளையாட்டு பிரிவு செயலாளரும் தடகள பயிற்ச்சியாளருமான சுரேஷ் பாபு இணைச் செயலாளரும் குத்துச்சண்டை பயிற்ச்சியாளருமான எழில் மணி மகளிர் பிரிவு செயலாளர் வழக்கறிஞர் கார்த்திகா இணைச் செயலாளர் அல்லி கொடி உள்ளிட்டோர் கலந்து கொண்டு  பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கி பாராட்டு மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்தனர் மேலும் இந்நிகழ்வில் லதா அனுஷ்மா நந்தினி பிரபு சர்வேஷ்  தர்ஷன் மற்றும் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் மாற்றம் அமைப்பின் நிர்வாகியும் நடிகருமான ஆர். ஏ. தாமஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு இருவரும் மேலும் பல சாதனைகள் புரிய வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்

Post a Comment

0 Comments