// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பில் இப்தார் நிகழ்ச்சி

விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பில் இப்தார் நிகழ்ச்சி

 விமன் இந்தியா மூவ்மெண்ட் திருச்சி மாவட்டம் சார்பாக சமய நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி நேற்று  விமன் இந்தியா மூவ்மெண்ட் திருச்சி மாவட்ட தலைவர் முமீனா பேகம் அவர்களின் தலைமையில் ஆழ்வார் தோப்பு பகுதியில் நடைபெற்றது.


இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக விமன் இந்தியா மூவ்மெண்ட் மாநில செயற்குழு உறுப்பினர் மெஹ்ராஜ் பானு, வழக்கறிஞர் P சாந்தி B.A.B.L, SDPI கட்சியின் மாவட்ட செயலாளர் மதர் Y ஜமால், மாவட்ட பொருளாளர் பக்ருதீன் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.


இந்நிகழ்வில் SDPI கட்சி மாவட்ட செயலாளர் தளபதி அப்பாஸ், மாவட்ட அமைப்புச் செயலாளர் சித்திக் மற்றும் விமன் இந்தியா மூவ்மெண்ட் மாவட்ட நிர்வாகிகள், ஆழ்வார் தோப்பு கிளை தலைவர் அப்துல் ரகுமான்  ஆகியோர் முன்னிலை வகித்தனர். 





மேலும் இந்நிகழ்வில் விமன் இந்தியா மூவ்மெண்ட் கிளை நிர்வாகிகள், பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments