BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** திருச்சி பிரணவ் கேஸ்ட்ரோ சென்டரில் சென்னை குளோபல் மருத்துவமனை சார்பில் கல்லீரல் நோய் பரிசோதனை முகாம்

திருச்சி பிரணவ் கேஸ்ட்ரோ சென்டரில் சென்னை குளோபல் மருத்துவமனை சார்பில் கல்லீரல் நோய் பரிசோதனை முகாம்

திருச்சி தில்லைநகர் பிரணவ் கேஸ்ட்ரோ சென்டர் மருத்துவமனையில் சென்னை குளோபல் மருத்துவமனை சார்பில் கல்லீரல் நோய் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

உலக கல்லீரல் தினம் ஆண்டுதோறும் ஏப்ரல் 19ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.


2023ம் ஆண்டு உலக கல்லீரல் தினத்தினை முன்னிட்டு கல்லீரல் நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது நோக்கம் ஆகும்.


சென்னை குலோபல் மருத்துவமனையில் உலக தரம் வாய்ந்த கல்லீரல் நோய்க்கான சிறப்புப் பிரிவு உள்ளது. சென்னை குலோபல் மருத்துவமனையின் சார்பில் இந்த மாதம் முழுவதும் பல்வேறு வகையான நோய்களைக் கண்டறியும் மருத்துவ முகாம் மற்றும் கல்லீரல் நோய் வராமல் காத்துக் கொள்வது எப்படி என்ற விழிப்புணர்வு கலந்தாய்வுகளையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


இந்த வகையில் திருச்சி தில்லைநகரில் செயல்பட்டு வரும் பிரணவ் கேஸ்ட்ரோ கேர் & சென்னை குளோபல் மருத்துவமனை இணைந்து இலவச கல்லீரல் மருத்துவ முகாம் மற்றும் இலவச ஆலோசனை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.


இந்த முகாமின் சிறப்பு அம்சமாக ரூ.7 ஆயிரம் மதிப்பு கொண்ட கல்லீரல் செயல்பாட்டை கண்டறியும் பைப்ரோ டச் லிவர் ஸ்கேன் முற்றிலும் இலவசமாக செய்யப்பட்டது.


இந்த முகாமில் கல்லீரல் பாதிப்பு உள்ள பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் பங்கு கொண்டு பயன் பெற்றனர்.


இந்த முகாமில் கலந்து கொண்ட பிரணவ் கேஸ்ட்ரோ சென்டர் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் டாக்டர் சசி ஆனந்த் நோயாளிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

இந்த முகாமில் கலந்து கொண்ட குலோபல் மருத்துவமனையின் கல்லீரல் சிறப்புப் பிரிவு தலைவர் டாக்டர் சோமசேகர் ஆகியோர் கூறுகையில், கடந்த மூன்று வருடங்களில் சென்னை குலோபல் மருத்துவமனையில் 400க்கும் மேற்பட்டவர்களுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

அதில் 100க்கு மேற்பட்ட குழந்தைகளும் அடங்கும். மேலும், கல்லீரல் நோய் வராமல் இருக்க மருத்துவப் பரிசோதனை, அதிக கொலஸ்ட்ரால் மிக்க உணவுகளைத் தவிர்ப்பது, கைகளை சுத்தமாக வைத்துக் கொள்வது, புகைப்பிடிப்பதை தவிர்ப்பது மற்றும் குடிப்பழக்கத்தைத் தவிர்ப்பது மேலும் உடற்பயிற்சிகளை மேற்கொள்வது அவசியம்.

பிரதி மாதம் மூன்றாம் வெள்ளிக்கிழமை குலோபல் மருத்துவமனையின் சிறப்பு கல்லீரல் துறை மருத்துவர் திருச்சி வந்து கல்லீரல் நோயாளிகளை கலந்தாய்வு செய்யப்படுகிறது என்றார்.

Post a Comment

0 Comments