BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி தமிழக எம்எல்ஏக்களிடம் நேரில் வலியுறுத்திய தமஜக தலைவர் கே.எம்.சரிஃப்

இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி தமிழக எம்எல்ஏக்களிடம் நேரில் வலியுறுத்திய தமஜக தலைவர் கே.எம்.சரிஃப்

 தமிழக சிறைகளில் வாடக்கூடிய இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் கே.எம்.சரிஃப்  தலைமையில் சட்டமன்றம் நோக்கிய நடை பயணங்கள்,.கண்டன ஆர்ப்பாட்டங்கள்,.கண்டன பொதுக்கூட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.


அதன் ஒரு பகுதியாக தமிழக எம்எல்ஏக்கள் அனைவரையும் நேரில் சந்தித்து தமஜகவின் சார்பாக சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி கோரிக்கை வைக்கும் முன்னெடுப்பினை சில நாட்களுக்கு முன்பு தமஜக தலைவர் கே எம் ஷெரிஃப் அறிவித்திருந்தார்.



அதனைத் தொடர்ந்து அந்தப் பணியை இன்றைய தினம் தொடங்கி தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் நேரில் சந்தித்து மனுக்களையும், கோப்புகளையும் கே.எம்.செரிப், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, விடுதலை தமிழ் புலிகள் கட்சியினுடைய தலைவர் குழந்தை அரசன் மற்றும் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாநில நிர்வாகிகள் வழங்கி வருகிறார்கள்.




இந்த வகையில் பாட்டாளி மக்கள் கட்சி சட்டமன்ற குழு தலைவர் ஜி கே மணி, சேலம் சட்டமன்ற உறுப்பினர் அருள், தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் சிந்தனைச் செல்வன், பாலாஜி, ஆளூர் ஷாநவாஸ்.






தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், மேட்டூர் பாமக சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் திண்டிவனம் அர்ஜுனன், வானூர் சக்கரபாணி, முன்னாள் அமைச்சர் காமராஜ்




குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு, துணை சபாநாயகர் பிச்சாண்டி, அரசு கொறடா கோவை செழியன், மதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மதுரை பூமிநாதன், அரியலூர் சின்னப்பா, முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோரை நேரில் சந்தித்து சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரி சட்டமன்றத்தில் வலியுறுத்துமாறு கேட்டுக் கொண்டனர்.



இந்த நிகழ்வின் போது தமிழக மக்கள் ஜனநாயக கட்சி நிர்வாகிகள் சண்முகராஜா, கம்பம் தன்வீர், புதுக்கோட்டை பாண்டியன், சண்முகராஜா, நெல்லை அஜீஸ், அப்துல் ரஷீத், தாஹா ஆகியோர் உடன் சென்றனர்.

Post a Comment

0 Comments