// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** திருச்சி மாவட்டம் முழுதும் தங்குதடையின்றி ஆவின் பால் கிடைக்க கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் நிர்வாகம் உடனே ஆவணம் செய்ய SDPI கட்சி கோரிக்கை

திருச்சி மாவட்டம் முழுதும் தங்குதடையின்றி ஆவின் பால் கிடைக்க கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் நிர்வாகம் உடனே ஆவணம் செய்ய SDPI கட்சி கோரிக்கை

திருச்சி மாவட்டம் முழுதும் தங்குதடையின்றி ஆவின் பால் கிடைக்க  கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் நிர்வாகம்  உடனே ஆவணம் செய்ய SDPI கட்சி தெற்கு மாவட்ட தலைவர் முபாரக் அலி கோரிக்கை வைத்துள்ளார். அவர் அளித்துள்ள அறிக்கையில் கூறுகையில்..




திருச்சி மாநகராட்சியில் கடந்த சில நாட்களாக ஆவின்  பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்பதை அறிந்தோம்.

மேலும் திருச்சியில் இருந்து நாள்தோறும் 15000 லிட்டர் ஆவின் பால் சென்னைக்கு அனுப்பபடுவதாக செய்திகள் வாயிலாக அறிய முடிகிறது.

ஆனால் திருச்சியில் வாழும் மக்களுக்கே ஆவின் பால் தேவை அதிகம் உள்ளது மேலும்,சரியான நேரத்திற்கு பால் கிடைக்க பெறுவதில்லை இதனால் குழந்தைகள் ,பெரியவர்கள்,நோயாளிகள்,கர்ப்பிணி தாய்மார்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளார்கள்.

செயற்கை ஆவின் பால் தட்டுப்பாட்டால் தனியார் பால் வியாபாரிகள் இதனை காரணம் காட்டி விலையை உயர்த்த கூடும்,இதற்கு தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் நிர்வாகம் இடமளிக்காமல் திருச்சி மாவட்டம் முழுதும் ஆவின் பால் தங்குதடையின்றி,குறித்த நேரத்தில் கிடைக்க ஆவணம் செய்ய வேண்டும். 

மேலும்,பண்டிகை காலம் என்பதால் கூட்டுறவு நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்தி மக்களுக்கு எவ்வித பாதிப்பும்,தவிப்பும் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று SDPI கட்சி சார்பாக கேட்டுக் கொண்டார்

Post a Comment

0 Comments