NEWS UPDATE *** அரசுப் பணியாளர்களுக்கான அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். *** திருச்சி தேசிய கல்லூரியில் இலக்கிய சொற்பொழிவு

திருச்சி தேசிய கல்லூரியில் இலக்கிய சொற்பொழிவு

 திருச்சிராப்பள்ளி தேசியக் கல்லூரியின் சுயநிதி பிரிவின் பாரதி பைந்தமிழ் பேரவை சார்பாக இலக்கியச் சொற்பொழிவு நடைபெற்றது. முதல்வர் முனைவர் கி. குமார் அவர்கள் தலைமை உரை நல்கினார்.துணை முதல்வர் முனைவர் து. பிரசன்ன பாலாஜி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். 


திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் தமிழ்த் துறை உதவி பேராசிரியர் முனைவர் சுகவனேஸ்வரன் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று தமிழ் கவிதையில் சமூகம் என்ற பொறுண்மையில்  சிறப்புரை நிகழ்த்தினார். சாதி தொழில் கல்வி வேலை வாய்ப்பு வாழ்வியல் என்று சமூகத்தின் சகல பரிமாணங்களிலும் கவிதை எவ்வாறு எல்லாம் நிறைந்து கிடக்கிறது என்பதை பதிவு செய்து மாணவர் மனம் உணரும் வண்ணம் சிறப்புரை நிகழ்த்தினார். முன்னதாக தமிழ் துறை தலைவர் முனைவர் மாணிக்கவாசகன் வரவேற்புரை வழங்கினார். பேரவை துணைத் தலைவர் முத்தையன் நன்றியுரை நல்கினார். பேராசிரியர் கருத்தான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

Post a Comment

0 Comments