NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** திருச்சி பன்னாட்டு புதிய விமான நிலையம் விரிவாக்கம் விவசாய நிலங்களை வையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு - விவசாயிகள் மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ளிருப்பு போராட்டம்

திருச்சி பன்னாட்டு புதிய விமான நிலையம் விரிவாக்கம் விவசாய நிலங்களை வையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு - விவசாயிகள் மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ளிருப்பு போராட்டம்

திருச்சி மாவட்ட விமான நிலைய விரிவாக்கத்திற்காக கீழக்குறிச்சி கிராமத்தில் விவசாய நிலங்களை  கையகம் செய்யப்படுவதை எதிர்த்து  நில உரிமையாளர்கள் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.



இது தொடர்பாக வழக்கு தொடர்ந்த 21  பேர் திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமியிடம் நேரில் சந்தித்து இது தொடர்பான விசாரணை இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.  



அதன்படி இடத்திற்கு சொந்தமான 21 பேர் இன்று 3 மணி அளவில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருந்தும் இதுவரை யாரும் எங்களை சந்திக்கவில்லை எனவும் தற்பொழுது வரை எங்களை காக்க வைக்கின்றனர் எனக் கூறி இடத்தின் உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு உள்ளே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments