NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** "அச்சம் தவிர்" பட குழுவினருக்கு வாழ்த்து

"அச்சம் தவிர்" பட குழுவினருக்கு வாழ்த்து

 கோவையில் தேசிய அளவில் விருது பெற்ற அச்சம் தவிர் பட குழுவினர் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் அலுவலகத்தில் அமைப்பின்  நிறுவனர் தலைவர் ஆர்.கே.குமார் மற்றும் பொதுச்செயலாளர் முனைவர். வி.எச் சுப்பிரமணியம் அவர்களையும் மரியாதை நிமித்தமாக சந்தித்து நன்றி மற்றும்  வாழ்த்துகளை தெரிவித்து நேரில் வாழ்த்துக்களை பெற்றனர்...



தலைநகர் டெல்லியில் உள்ள தேசிய மனித உரிமைகள் ஆணையம் சார்பில் நடத்தப்பட்ட தேசிய அளவிலான குறும்பட போட்டியில் தமிழகத்தில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் மற்றும் மாற்றம் அமைப்பின் சார்பில் எடுக்கப்பட்ட அச்சம் தவிர் குறும்படம் தேசிய அளவில்  3 ம் இடத்தை பிடித்து வெற்றி பெற்றுள்ளது இந்த வெற்றிக்கு உறுதுணையாக படத்திற்காண பல்வேறு உதவிகள் செய்து பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கி உதவிய அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் சார்பில் செய்யப்பட்டது ...




தேசிய விருது பெற்று அச்சம் தவிர் குறும்படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து மாண்புமிகு முன்னாள் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியும் அமைப்பின் கொளரவ தலைவருமான மாண்புமிகு நீதியரசர் எம். கற்பகவிநாயம் அவர்கள் படக்குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார் மேலும் அமைப்பின் நிறுவனர் & தலைவருமான ஆர். கே. குமார் பொதுச்செயலாளர் முனைவர் வி. எச்.சுப்ரமணியம் உள்ளிட்டோரும் அச்சம் தவிர் பட குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்...





இந்நிலையில் இப்படம் உறுவாக காரணமாக இருந்த அமைப்பின் நிறுவனர் & தலைவர் ஆர். கே. குமார் மற்றும் பொதுச்செயலாளர் முனைவர் வி. எச். சுப்பிரமணியம் அவர்களையும் பட குழுவினர் கோவை மாவட்டம் கணபதியில் உள்ள அமைப்பின் தலைமை அலுவலகத்தில் நேரில் சந்தித்து அவர்களின் ஆதரவுக்கு பட குழுவின் சார்பில் நன்றியும் பொன்னாடை அணிவித்து வாழ்த்து களையும் தெரிவித்தனர்...




இதனை தொடர்ந்து அச்சம் தவிர் குறும் படத்தின் புதிய போஸ்டரும் வெளியிடப்பட்டது இந்நிகழ்வில் அமைப்பின் சார்பில் ஏழ்மைமான குடும்பத்தை சேர்ந்த 10ம் வகுப்பு பயிலும் பள்ளி  மாணவர் அனுராஜ்க்கு கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது...



இந்நிகழ்வில்  அச்சம் தவிர் படத்தின் இயக்குனர் குமார் தங்கவேல் இணையக்குனரும் அமைப்பின் தேசிய ஒருங்கஇணைப்பாளரும் மாற்றம் அமைப்பின் நிர்வாகியும் நடிகருமான ஆர்.ஏ.தாமஸ் படத்தின் ஸ்கிரிப்ட் ரைட்டர் அங்கமுத்து நடிகர் அசோக் குமார் ஹரிகரசுதன் ஹரிஹரசுதன் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் துணைத்தலைவர் நாராயண செல்வராஜ் உறுப்பினர் அப்பு ஜெயபிரகாஷ் உதவி தொகை பெற்ற  மாணவர்  அனுராஜ் அவரது பெற்றோர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

Post a Comment

0 Comments