BREAKING NEWS *** "மதுபான கொள்கை முறைகேடு புகாரில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை" உச்சநீதிமன்றத்தில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம் *** கோவில் திருவிழாவில் பிளாஸ்டிக் தீமை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவில் திருவிழாவில் பிளாஸ்டிக் தீமை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

 தேனி மாவட்டம்  வீரபாண்டி கெளமாரி அம்மன் கோவில் திருவிழாவில் கலந்து கொள்ள வருகை புரிந்த பொதுமக்களுக்கு  அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் மற்றும் மாற்றம் அமைப்பின் சார்பில் பிளாஸ்டிக் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு செய்தும் மக்கும் வகையிலான பைகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது...




முன்னாள் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியும் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் கொளரவ தலைவருமான மாண்புமிகு நீதியரசர் எம். கற்பகவிநாயம் அவர்களின் வழிகாட்டுதலின்படியும் அமைப்பின் நிறுவனர் & தலைவர் ஆர். கே. குமார் பொதுச்செயலாளர் முனைவர் வி. எச்.சுப்பிரமணியன் அவர்களின் ஆலோசனை படியும் அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் மாற்றம் அமைப்பின் நிர்வாகியும் நடிகருமான ஆர். ஏ. தாமஸ் அவர்களின் ஒருங்கிணைப்பிலும் இத்திருவிழாவில் கலந்து கொள்ள வருகை புரிந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது ..


இந்த திருவிழாவில் பொதுமக்கள் கொண்டு வந்த பாலீதின் பைகளை பெற்று கொண்டு அதற்கு பதிலாக  மக்கும் வகையிலான பைகள் வழங்கப்பட்டது...





இந்த நிகழ்வு அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் மற்றும் மாற்றம் அமைப்பின் சார்பில் தேனி மாவட்டத்தை பசுமை நகரமாக வைக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது இந்நிகழ்வில்  அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் திருப்பூர் மாவட்ட செயலாளரும், திரைப்பட இயக்குனருமான குமார் தங்கவேல் அன்பு நித்யா பேபி கமலேஷ்  பாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு  ஏற்படுத்தினர்

Post a Comment

0 Comments