// NEWS UPDATE *** ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு. அதிமுக - பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் +++++++++++++++++++++++ பிகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை *** இன்று பிறந்தநாளையொட்டி முன்னாள் எம்.பி. அடைக்கலராஜ் சிலைக்கு காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை

இன்று பிறந்தநாளையொட்டி முன்னாள் எம்.பி. அடைக்கலராஜ் சிலைக்கு காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை

தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் துணைத் தலைவரும், திருச்சியில் 4 முறை எம்.பி.யாகவும் இருந்து மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் எல். அடைக்கலராஜ்  பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. 


இதையொட்டி திருச்சி பாரதிதாசன் சாலையில் உள்ள ஜென்னி பிளாசா வணிக வளாகத்தில் உள்ள அடைக்கல ராஜ் சிலைக்கு அவரது மகன்களும் தொழிலதிபருமான ஜோசப் பிரான்சிஸ், வின்சென்ட்  அடைக்கலராஜ் ஆகியோர் தலைமையில் திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜவகர் முன்னிலையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் நிர்வாகிகள் பொருளாளர் ராஜா நசீர்,


மாநகராட்சி கவுன்சிலர் ரெக்ஸ், வடக்கு மாவட்ட பொருளாளர் இளையராஜா.

கள்ளிக்குடி சுந்தரம்,          ஜி. கே.முரளி,கோட்டத் தலைவர்கள் சிவாஜி சண்முகம்,ராஜா டேனியல் ராய், பிரியங்கா பட்டேல் மற்றும் ,ராஜா,சேட், வில்ஸ் முத்துக்குமார். பஞ்சாயத்து ராஜ் மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை, ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் மாநகர் மாவட்ட பொது செயலாளர் ஆர்.ஆர்.,

ஜெகதீஸ்வரி, பட்டேல், விக்டர், பொதுச்செயலாளர் பூக்கடை பன்னீர்செல்வம், காசிம், ரமேஷ் சந்திரன், சத்தியமூர்த்தி, பிலால், ஜெரால்டு, முத்துசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments