BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** 28 வது வார்டில் கவுன்சிலர் பைஸ் அகமது ஆய்வு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு

28 வது வார்டில் கவுன்சிலர் பைஸ் அகமது ஆய்வு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு

திருச்சி மாநகராட்சி 28 வது வார்டு கவுன்சிலராக பைஸ் அகமது உள்ளார்.

கவுன்சிலர் பைஸ் அகமது வார்டு  பகுதியில் தினந்தோறும் நடைபெறும் மக்கள் நல பணிகள் சுகாதார பணிகள், சாலை சீரமைப்பு,புதிய குடிநீர் குழாய்கள் பதித்தல்,புதிய பாதாள சாக்கடை குழாய்கள் தொட்டிகள் அமைத்தல், ஆகிய பணிகள் சரிவர செய்யப்படுகிறதா என தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்.



மேலும் அவரது வார்டு பகுதியில் குடிநீர் தொட்டிகள் புதுப்பித்தல்,சிறிய பாலங்கள் அமைப்பது தெருக்களில் ஏற்படும் சிறிய பள்ளங்களை சீரமைத்தல்,மின் கம்பங்களில் மரக் கிளைகளால் ஏற்படும் உராய்வுகளை தடுக்க கிளைகளை அகற்றுதல்,மரக்கழிவுகள் மற்றும் தோட்ட கழிவுகளை அகற்றுதல்,தென்னூர் ஹைரோடு மற்றும் அண்ணாநகர் பிரதான சாலைகளில் தேங்கும் மண் தூசிகளை அகற்றி தூய்மை படுத்துதல்,வீடு வீடாக சென்று குப்பைகளை பெறுதல்,சாக்கடை களை முறை வைத்து தெரு வாரியாக தூய்மைபடுத்துதல்,


தென்னூர் இரட்டை வாய்க்கால், அண்ணாநகர் கண்ணதாசன் சாலை பிரதான கால்வாய்கள், அன்னை சத்யா நகர் ரயில்வே பாலம் கால்வாய் என அனைத்திலும் தேங்கு பிளாஸ்டிக் குப்பைகளை தூர்வாருதல்,தெரு விளக்குகளை முறையாக கண்காணித்து பழுது ஏற்பட்டால் உடனடியாக சரி செய்வது,பழைய பாதாள சாக்கடை தொட்டிகளை தூய்மை படுத்துவது குடிநீர் வரத்தில் ஏற்படும் குறைகளை சீர் செய்வது,



 28 வது வார்டு மாமன்ற உறுப்பினரின் கோரிக்கையை ஏற்று எதிர்பாராத மின் விபத்துகள் ஏற்படும் பொழுது 28 வது வார்டு பகுதிக்கு மாற்று மின் பாதையில் மின்சாரம் கொண்டு வந்து உடனடியாக மின் விநியோகம் கிடைக்கும் வகையில் Double Pole Switch Post தென்னூர் அரசமரம் பகுதியில் அமைக்கபட்டுள்ளது



வார்டில் இ சேவை மையம், நூலகம் மற்றும் புதிய ரேஷன் கடை கட்டிடம், சமுதாய கூடம், குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் பயிற்சி பெறும் வகையில் விளையாட்டு அரங்கம் அமைப்பது,

28 வது வார்டில் புதிய பாதாள சாக்கடை திட்டம் மற்றும் புதிய குடிநீர் திட்டம் இல்லாத பகுதிகளை  அமைச்சர்,  மேயர், உயர்திரு ஆணையர், ஒப்பந்த நிறுவன அதிகாரிகள் என அனைவரிடமும் தொடர்ந்து வலியுறுத்தி பணிகளை மேற்கொள்ளுதல் என பல்வேறு பணிகள் இடைவிடாமல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சில நபர்கள் தங்களின் சுயநல அரசியலுக்காக சில தொழில்நுட்ப காரணங்களால் ஏற்படும் சிறிய குறைகளை பெரிது படுத்தி ஆதாயம் அடைய பார்க்கிறார்கள்.

மக்கள் செல்வாக்கை இழந்தவர்கள் செயற்கையாக குறைகளை உருவாக்கி அதனை  கொண்டு பிரபலம் ஆகிவிடலாம் என என்னுகிறார்கள்.

அவர்களை விட 28 வது வார்டு வளர்ச்சிக்காக மாண்புமிகு அமைச்சர், மாண்புமிகு மேயர், உயர்திரு ஆணையர், நகர தலைமை பொறியாளர், மண்டல தலைவர், உதவி ஆணையர், உதவி செயற்பொறியாளர், இளநிலை பொறியாளர் என அனைவருடனும் இணைந்து மக்கள் நல பணியாற்று மாமன்ற உறுப்பினர் பைஸ் அகமது அவர்களின் பணிகளை கட்சி இயக்க அரசியல் பேதம் இல்லாமல் மற்ற மாமன்ற உறுப்பினர்களும் 28 வது வார்டு பொது மக்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்


Post a Comment

0 Comments