// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** ரிகாப் இந்தியா சேரிட்டபுள் டிரஸ்டி சார்பில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

ரிகாப் இந்தியா சேரிட்டபுள் டிரஸ்டி சார்பில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

ரிகாப் இந்தியா சேரிட்டபுள் டிரஸ்டின்  16 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டி திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் இன்று நடைபெற்றது.




இந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை ரிகாப் இந்தியா சேரிடபுள்  டிரஸ்ட் மேனேஜிங் டிரஸ்டி நந்தினி சக்திவேல் கொடியசைத்து துவங்கி வைத்தார். இதில் பள்ளி மாணவ மாணவிகள் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 




மேலும் இந்த மாரத்தான் போட்டியானது உழவர் சந்தை மைதானத்தில் தொடங்கி கோர்ட்டு வழியாக கண்டோன்மெண்ட் காவல் நிலையம், பாரதியார் சாலை, தலைமை தபால் நிலையம், டிவிஎஸ் டோல்கேட் வழியாக  திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் நிறைவடைந்தது. இந்த மாரத்தான் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.15000/- பணம் மற்றும் வெள்ளி காயின் கொடுக்கப்பட்டது. மேலும் போட்டியில் கலந்து கொண்ட அனைவரையும் ரிகாப் இந்தியா சேரிட்டபுல் டிரஸ்டின் நிறுவனத் தலைவர் சக்தி சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார்.

Post a Comment

0 Comments