BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** திருச்சி தேசியக் கல்லூரியில் வணிகவியல் வினாடி வினா சங்கம் தொடக்க விழா

திருச்சி தேசியக் கல்லூரியில் வணிகவியல் வினாடி வினா சங்கம் தொடக்க விழா

 திருச்சி தேசியக் கல்லூரி கூட்ட அரங்கம் 1 இல் வணிகவியல் வினாடி வினா சங்கம் தொடக்க விழா  துவங்கியது . சிறப்பு விருந்தினராக தேசிய கல்லுரி துணை முதல்வர் (உள்தர மேம்பாட்டு உறுதி ஒருங்கிணைப்புக்குழு )

முனைவர் D E பென்னட் அவர்கள் கலந்து கொண்டு வினாடி வினா விளையாடுவோம் என்ற தலைப்பில் உரையாற்றினார். அவருடைய தலமையுரையில் கூறியதாவது:



மாணவர்கள் தற்போது உள்ள அறிவுசார் உலகத்திற்கேற்ப தங்களை தயார் படுத்தி கொள்ள வேண்டும். தங்களது பாட பிரிவுகள் மட்டுமின்றி பிற துறை பாட பிரிவுகளிலும் தங்களது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என கூறினார். 



கல்லூரி முதல்வர் முனைவர் கி.குமார் வாழ்த்துரை வழங்கினார்.கல்லூரி துணை முதல்வர் முனைவர் ஆர். இளவரசு தலைமையுரையாற்றினார.துறை தலைவர் முனைவர் மு. ஷர்மிளா  சிறப்புரை  வழங்கினார்.  வினாடி வினா சங்க தொடக்க விழாவிற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்   முனைவர் ம. சௌரியார் துரைசாமி செய்தார். முன்னதாக முதுநிலை இரண்டாமாண்டு  வணிகவியல் பயிலும் மாணவி அன்னலட்சுமி வரவேற்புரையாற்றினார். முதுநிலை முதலாமாண்டு மாணவர் குரு ராகவேந்திரா சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினார் . முதுநிலை முதலாமாண்டு மாணவி சந்தியா  நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை முதுநிலை முதலாமாண்டு மாணவிகள்  கௌசிஹா மற்றும் யோகிதா தொகுத்து வழங்கினர். திரளான பேராசிரியர்கள் , மாணவ மாணவிகள் கலந்துக்கொண்டனர்.


நிருபர் ரூபன் 

Post a Comment

0 Comments