BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** திருச்சி தேசிய கல்லூரியில் வணிக சந்தையிடுகை மன்றம்

திருச்சி தேசிய கல்லூரியில் வணிக சந்தையிடுகை மன்றம்

திருச்சி, தேசிய கல்லூரியில்  வணிகவியல் துறை சார்பாக வணிகச் சந்தையிடுகை மன்றத்தின் துவக்க விழா கல்லூரியின்  கூட்ட அரங்கில் நடைபெற்றது. 

இதில் முதலாம் ஆண்டு முதுகலை பயிலும் மாணவி பி. கௌசிகா  வரவேற்றார். முதல்வர் (பொ) முனைவர். எஸ். சுனிதா தலைமையுறை ஆற்றினார்.

வணிகவியல்‌துறைப் பேராசிரியர் முனைவர். எம். சர்மிளா வாழ்த்துரை வழங்கினார். 

சிறப்பு விருந்தினராக தேசியக்கல்லூரி தடவாளவியல் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர்  தி. ஜஸ்டின் அவர்கள் கலந்துகொண்டு . சந்தைப்படுத்துதல் என்பதன் முக்கியத்துவத்தை விளக்கிக் கூறினார்.  



மாணவர்கள் கல்லூரியில் படிக்கின்ற காலத்திலேயே , சந்தை படுத்துதல் நுட்பத்தை அறிந்து கொண்டால் , எதிர்காலத்தில் தொழில் முனைவோராக விரும்பினால் , நுகர்வோரின் தேவைக்கேற்ப முடிவுகளை எடுக்க இயலும் என்று தெளிவு படுத்தினார். மேலும் இந்த கூட்டத்தில் சந்தைப்படுத்துதல். தொடர்பான  தற்போதைய வணிக சூழ்நிலையை எடுத்துக்காட்டுகள் மூலம் விளக்கி கலந்துரையாடினர்.

 ஒருங்கிணைப்பாளரான வணிகவியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர்                    

செ. கணபதி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்தார். முதலாம் ஆண்டு முதுகலை வணிகவியல் பயிலும் மாணவன் குரு ராகவேந்திரா   சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார்.  முதலாம் ஆண்டு முதுகலை வணிகவியல் பயிலும் மாணவன் ஹரி ராம் நினைவு பரிசு வழங்கினார். முதலாம் ஆண்டு முதுகலை வணிகவியல் பயிலும் மாணவி யோகிதா நன்றி கூறினார். நிகழ்ச்சியை முதலாம் ஆண்டு முதுகலை வணிகவியல் பயிலும் மாணவிகள் சந்தியா மற்றும் பிரியதர்ஷினி தொகுத்து வழங்கினார். வணிகவியல் துறை  

மாணவ மாணவிகள் திரளானோர் கலந்து கொண்டனர். கூட்டமானது கட்டாயம் மாணவ மாணவிகளுக்கு பயன் உள்ளதாக இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.


நிருபர் ரூபன் 

Post a Comment

0 Comments