NEWS UPDATE *** அரசுப் பணியாளர்களுக்கான அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். *** திருச்சி தேசிய கல்லூரியில் இளங்கலை மாணவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம்

திருச்சி தேசிய கல்லூரியில் இளங்கலை மாணவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம்

திருச்சி தேசிய கல்லூரியில் பொருளாதார துறை சார்பில் இளங்கலை இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. 


 இளங்கலை இரண்டாம் ஆண்டு மாணவி மீனா & நித்தியா  வரவேற்புரை வழங்கினார்கள். கல்லூரி முதல்வர் முனைவர் கி. குமார் தலைமை வகித்தார்.  பொருளாதார துறை தலைவர் & தேர்வு நெறியாளர் முனைவர் து. ஸ்ரீதர் மற்றும் இணை பேராசிரியர் சி. திருமாறன் ஆகியோர் பெற்றோர்களை வரவேற்று சிறப்புரையாற்றினார்கள். 


இக்கூட்டத்தில் மாணவர்களின் பெற்றோர்களிடம் பொருளாதார துறை பேராசிரியர்கள் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்துரையாடி கருத்துக்களை பரிமாறிக் கொண்டார்கள். மேலும் இந்த நிகழ்ச்சியினை  வகுப்பாசிரியர் முனைவர் ஞா.ரகுநாத் ஒருங்கிணைத்தார். இளங்கலை இரண்டாம் ஆண்டு மாணவர் பாலமுருகன் நன்றி கூறினார்.


நிருபர் ரூபன் 

Post a Comment

0 Comments