// NEWS UPDATE *** திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை *** லீ போஸ் அழகு நிலையம் திறப்பு விழா

லீ போஸ் அழகு நிலையம் திறப்பு விழா

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் பகுதில் புதிதாக லீ போஸ் அழகு நிலையம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது,


இதில் சிறப்பு விருந்தினராக அஸ்வின் ஸ்வீட்ஸ் நிறுவனர் கனேஷன் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி குத்து விளக்கேற்றி தொடங்கிவைத்தார்.


சிறப்பு அழைப்பாளர்களாக எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் இமாம் ஹசான் பைஜி, தமிம் அன்சாரி,விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், தமிழாதன், புல்லட் லாரன்ஸ், அரியமங்கலம் பீர்முகமது திருச்சி மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டு நிறுவனத்தினர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்


இந்த அழகு நிலையத்தில் ஆண்கள் பெண்களுக்கு என்று பிரத்தியேகமான முறையில் அழகு படுத்துதல் சிகை அலங்காரம் ஐ ப்ரோ.மெஹந்தி அலங்காரம்,மணப்பெண் அலங்காரம்,மாப்பிள்ளை அலங்காரம்,உள்ளிட்ட அலங்காரமும் சிறுவர் முதல் பெரிய வரை சிகை அலங்காரமும், செய்யப்படுகிறது




இவை அனைத்தும் அழகு கலை பயின்ற பயிற்சியாளர்களை கொண்டு சிறந்த முறையில் செய்யப்படுகிறது என லீ போஸ் உரிமையாளர்கள் ரிஸ்வான், நசிஹா மற்றும் விசித்ரா ஆகியோர் தெரிவித்தனர்.

இந்த திறப்பு விழாவில் அரசியல் கட்சி பிரமுகர்கள் தொண்டு அமைப்புகள் இயக்கங்கள் மற்றும் உறவினர்கள் நண்பர்கள் உட்பட பலர் கலந்து வாழ்த்தினர்

Post a Comment

0 Comments