// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு விலையில்லா மிதி வண்டியை வழங்கிய எம்எல்ஏ.

அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு விலையில்லா மிதி வண்டியை வழங்கிய எம்எல்ஏ.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் உள்ள அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு இலவச விலையில்லா மிதிவண்டியை வழங்கிய எம்எல்ஏ கதிரவன்.


2022- 23 ஆம் ஆண்டு பள்ளி மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா இலவச மிதிவண்டி வழங்கும் விழா மண்ணச்சநல்லூர் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று நடைபெற்றது.  முன்னதாக பள்ளி நிர்வாகம் சார்பில் எம்எல்ஏ விற்க்கு சிறப்பான வரவேற்பு அளித்து பொன்னாடை போர்த்தி வரவேற்றனர். இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மண்ணச்சநல்லூர் எம்எல்ஏ கதிரவன் மாணவிகளிடையே சிறப்புரையாற்றினார்.இதனைத் தொடர்ந்து எம்எல்ஏ கதிரவன் மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.



இந்நிகழ்வில் மண்ணச்சநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் வி. எஸ். பி இளங்கோவன், மேற்கு ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், மத்திய ஒன்றிய செயலாளர் சீனிவாச பெருமாள், ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ஸ்ரீதர், துணை பெருந்தலைவர் கே பி எ செந்தில், நகர செயலாளர் மனோகர், பேரூராட்சி தலைவர் சிவசண்முகக்குமார் மற்றும் திமுக நிர்வாகிகள் இளைஞர் அணியினர், தகவல் தொழில்நுட்ப அணியினர் ஆசிரியர்கள் மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments