// NEWS UPDATE *** "காங்கிரஸ் கட்சியுடன் எந்த மோதல் போக்கும் இல்லை. திமுக கூட்டணிக்கு புதிய கட்சிகள் வர வாய்ப்பு உள்ளது; கூட்டணியில் இணையும் புதிய கட்சி குறித்து முதல்வர் அறிவிப்பார்" - திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி *** திருச்சியின் மையப்பகுதியில் உள்ள பெண்கள் மத்திய சிறையை மாற்றி காந்தி மார்க்கெட்டை விரிவாக்கம் செய்ய வேண்டும் - சட்டசபையில் இனிகோ இருதயராஜ்

திருச்சியின் மையப்பகுதியில் உள்ள பெண்கள் மத்திய சிறையை மாற்றி காந்தி மார்க்கெட்டை விரிவாக்கம் செய்ய வேண்டும் - சட்டசபையில் இனிகோ இருதயராஜ்

 15 ஆம் தேதி நேற்று நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் அவர்கள் தனது தொகுதிக்குட்பட்ட காந்தி மார்க்கெட் – பாலக்கரை பகுதியில் அமைந்துள்ள மகளிர் சிறைச்சாலையினை புறநகர் பகுதியில் மாற்றி அமைக்க வேண்டும் 

என்று தேர்தல் அறிக்கையில் அறிவித்தப்படி வேறு இடத்திற் மாற்றம் செய்து காந்தி மார்க்கெட்டை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று கேள்வி எழுப்பியதற்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அவர்கள்,

 மகளிர் சிறைச்சாலையை மாற்ற புறநகர் பகுதியில் இடம் கேட்டு மாவட்ட ஆட்சித்தலைவரிடம் கோடுள்ளதாகவும், கிடைக்கப்பெற்றபின் உடனடியாக மாற்றுவதாகவும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments