BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** இரண்டு குழந்தைகளை மீட்டு தரக்கோரி ஸ்ரீரங்கம் மகளிர் காவல் நிலையம் முன்பு தந்தை தர்ணா போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு

இரண்டு குழந்தைகளை மீட்டு தரக்கோரி ஸ்ரீரங்கம் மகளிர் காவல் நிலையம் முன்பு தந்தை தர்ணா போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு

 இரண்டு குழந்தைகளை மீட்டு தரக்கோரி ஸ்ரீரங்கம் மகளிர் காவல் நிலையம் முன்பு தந்தை தர்ணா போராட்டத்தில் ஈடுபட முயன்றதால்  பரபரப்பு

இதுகுறித்து குழந்தைகளின் தந்தை ஹரிஹர் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-


திருச்சி திருவானைக்கோவில் பகுதியை சேர்ந்த ஹரிஹர் இவரது மனைவி சிவகாம வள்ளி இவர்களுக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு திருமண நடைபெற்றது. எங்களுக்கு ஏழு வயதில் ஆன்ட்டிஸம் பாதிக்கப்பட்ட ஒரு மகனும், 4 வயதில் ஒரு மகளும் உள்ளார். 


இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு எனது மனைவி திருச்சி தேசிய கல்லூரியில் உதவி பேராசிரியராக வேலைக்கு சேர்ந்தார். அன்றிலிருந்து எனது மனைவியின் நடவடிக்கைகளில் பல்வேறு மாற்றங்கள் காணப்பட்டது. மேலும் அதே கல்லூரியில் படிக்கும் மாணவர்களுடன் இரவு நேரம் வரை வாட்ஸப் அப் மூலம் ஆபாசமாக பேசி வந்தது எனக்கு தெரியவந்தது. அதேபோல் அந்தக் கல்லூரியில் உள்ள இரண்டு பேராசிரியர்கள் உடன் சேர்ந்து எனது மனைவி சிவகாம வள்ளி என்னிடம் சண்டை போட்டுக்கொண்டு அவரது சொந்த ஊருக்கு சென்றுவிட்டார்.


இந்நிலையில் ஸ்ரீரங்கம் மகளிர் காவல் நிலையத்தில் வைத்து எனது ஆட்டிசம் பாதிக்கப்பட்ட மகனுக்காகவும் மகளுக்காகவும் எனது மனைவியை மன்னித்து அவருக்கு கருமண்டபத்தில் லீசுக்கு வீடு எடுத்து கொடுத்தேன் அந்த வீட்டில் என் மனைவி 2 குழந்தையுடன் தங்கினார். இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மீண்டும் சில கல்லூரி மாணவர்களுடன் வெளியிடங்களில் என் மனைவி சுற்றுவதை நானும் எனது பிள்ளைகளும்  நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்தோம்.  இதுகுறித்து எனது மனைவியிடம் ஏன் இப்படி எல்லாம் நடந்து கொள்கிறாய் என கேட்டதற்கு என்னிடம் சண்டை போட்டு எனது இரு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றார். அன்றிலிருந்து இன்று வரை எனது மனைவி மற்றும் இரு குழந்தைகளும் எங்கு இருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியவில்லை.  மேலும் எனது ஆண்டிசம் பாதிக்கப்பட்ட மகனையும் மகளையும் என் மனைவியிடம் இருந்து மீட்டுத் தரக்கோரி நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு அளித்தேன் ஆனால் கடந்த எட்டு மாதங்கள் ஆகியும் எனது பிள்ளைகளை என்னால் பார்க்க முடியவில்லை இது குறித்து உறையூர் காவல் நிலையத்திலும் ஸ்ரீரங்கம் காவல் நிலையம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கை இந்நாள் வரை எடுக்கப்படவில்லை மேலும் கடந்த 15 நாட்களுக்கு மேலாக ஸ்ரீரங்கம் மகளிர் காவல் நிலையத்திற்கு தினமும் வந்து சென்று கொண்டிருக்கிறேன். நான் அளித்த புகார் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் இன்று நானும் எனது வயதான தாயாரும் காலையிலிருந்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளருக்காக காவல் நிலையம் முன்பு காத்திருக்கிறோம் எப்படியாவது காவல்துறையினர் எனது ஆண்டிசம் பாதிக்கப்பட்ட மகனையும் மகளை மீட்டு தர வேண்டும் இல்லையென்றால் காவல் நிலையம் முன்பு தர்ணாவில் ஈடுபடுவோம் என தெரிவித்தார். இந்நிலையில் ஸ்ரீரங்கம் மகளிர் காவல் நிலைய போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இன்னும் இரண்டு மூன்று நாட்களில் நீங்கள் அளித்த புகார் மீது விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments