BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** திருச்சி ஜங்ஷன் கோட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் சுதந்திர தின கொண்டாட்டம்

திருச்சி ஜங்ஷன் கோட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் சுதந்திர தின கொண்டாட்டம்

 திருச்சி ஜங்ஷன் கோட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் 77வது சுதந்திர தின விழா - பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி கொண்டாட்டம்




திருச்சி மாநகர மாவட்ட ஜங்ஷன் கோட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் 77 வது சுதந்திர தின விழா பீமநகரில் நடைப்பெற்றது. இவ்விழாவிற்கு ஜங்ஷன் கோட்ட தலைவர் பிரியங்கா பட்டேல் தலைமை தாங்கினார். 51வது வார்டு தலைவர்.கண்ணன் வரவேற்றார்.  மாநில பொதுச்செயலாளர் வக்கீல் சரவணன் மற்றும் ஓபிசி மாவட்டத் தலைவர் டெக்ஸ்,  மாவட்ட பொருளாளர் ராஜா நசீர், மாவட்ட பொதுச் செயலாளர் ஆடிட்டர் சுரேஷ் மற்றும் இளைஞர் காங்கிரஸின் மாவட்ட தலைவர் ரமேஷ் சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 





இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாநில பொதுச்செயலாளர் வக்கீல் சரவணன் அவர்கள் பேசுகையில், "பாராளுமன்றத்தில் அதானியை பற்றி கேள்வி எழுப்பியதால், மோடி குறித்து அவதூறாக பேசிவிட்டார் என ராகுலுக்கு அதிக பட்ச தண்டனையாக எம்.பி பதவி பறிபோகும் நிலை ஏற்பட்டது. ஆட்சிக்கு வந்த மோடி, கருப்பு பணத்தை ஒழிக்கிறேன் என்ற பெயரில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்து புதிதாக 2000 ரூபாய் நோட்டை தொடங்கி வைத்தார். தற்போது மூன்று மாதங்களில் முன்பு 2000 ரூபாய் நோட்டுகளும் செல்லாது என அறிவிப்பு வந்தது. ஒரு திட்டமிடல் இல்லாமல் மோடி அரசாங்கம் செயல் பட்டு வருகிறது‌‌. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரே மோடி அரசாங்கம் மோசமாக உள்ளது என பேசியுள்ளார். பாராளுமன்றத்தில் மணிப்பூர் சம்பவத்தை பற்றி மோடி பேச வேண்டும் என்று நம்பிக்கை இல்லா தீர்மானம் இயற்றினால், அங்கு ஜெயலலிதா பற்றி பேசுகிறார் நிர்மலா சீதாராமன். பாராளுமன்றம் வந்த மோடி, பேசிய ஒன்றே கால் மணி நேரத்திற்கும் மேல் காங்கிரஸை எதிர்த்து தான் பேசினாரே தவிர நாட்டு மக்களிடம் ஆட்சியில் வந்த சாதனைகளை பற்றியும், மணிப்பூர் சம்பவம் பற்றியும் எதுவும் பேசவில்லை‌. நமது நாடு மீண்டும் சுதந்திரம் அடைய வேண்டும் என்றால் வேண்டும் 2024 தேர்தலில் ராகுல் காந்தியை பிரதமராக்க வேண்டும்" என்றார். அதன் பின் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. 





இந்நிகழ்ச்சியில் மாநில செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி, ஸ்ரீரங்கம் ‌கோட்ட தலைவர்  சிவாஜி சண்முகம், அனைத்து இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கிறிஸ்டோபர் திலக் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார். வார்டு தலைவர்களாக 51வது வார்டு கண்ணன்,  55வது வார்டு. ரவி, 52வது வார்டு வீரமணி, 54வது வார்டு சாமிநாதன், 28 வது வார்டு சண்முகம், 58 வது வார்டு ஜெயராஜ், 60 வது வார்டு ஷேக் பாய்,29 வது வார்டு பாபு ‌விழாவை வழி நடத்தினர்.உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆழ்வார்தோப்பு பஷீர் பாய் நன்றியுரையாற்றினார்.





முன்னதாக 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடந்த ஓட்டப்போட்டி லெமன் வித் ஸ்பூன் , மியூசிக்கல் சேர், ஸ்லோ சைக்கிள் ரேஸ் மற்றும் பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

Post a Comment

0 Comments