NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** திருச்சி ராஜகணபதி ஆலய கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு புனித நீர் எடுத்து வருதல் நடைபெற்றது திரளான பங்கேற்பு

திருச்சி ராஜகணபதி ஆலய கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு புனித நீர் எடுத்து வருதல் நடைபெற்றது திரளான பங்கேற்பு

திருச்சி முடுக்குப்பட்டி சேதுராம் பிள்ளை காலனி பகுதியில் அருள்மிகு ஸ்ரீ ராஜகணபதி ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோயிலில் வரும் ஞாயிற்றுக்கிழமை சுபயோக தினத்தில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.


அதனை ஒட்டி இன்று காவிரி ஆற்றில் இருந்து புனித தீர்த்த நீர் எடுத்து வரப்பட்டது.

இது அம்மா மண்டபம் வழியாக சத்திரம் பேருந்து மற்றும் தலைமை தபால் நிலையம் வழியாக கோவில் வந்து அடைந்தது .

இதில் ஏராளமான பக்தர்கள் காவி உடை அணிந்து பால்குடம் எடுத்து வந்தனர் .






மேலும் நாளை காலை 6 மணிக்கு கணபதி ஹோமத்துடன் வாஸ்து சாந்தி , வரும் இரண்டாம் தேதி இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று, மாலை மூன்றாம் யாகசாலை பூஜை நடைபெற உள்ளது. 


மேலும் விழாவின் முக்கிய நிகழ்வான மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments