BREAKING NEWS *** கனமழை பெய்தால் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மை துறை கடிதம் இன்று முதல் 19ம் தேதி வரை மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. *** சிறுபான்மையினரை இழிவு படுத்தி பேசிய சீமானுக்கு யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைவர் பீமநகர் ரபீக் கடும் கண்டனம்

சிறுபான்மையினரை இழிவு படுத்தி பேசிய சீமானுக்கு யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைவர் பீமநகர் ரபீக் கடும் கண்டனம்

சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் சாத்தானின் பிள்ளைகளாய் மாறிவிட்டதாக கூறினார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இது தொடர்பாக யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் பீமநகர் ரபீக் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மணிப்பூர் வன்முறை வெறியாட்டங்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அந்த ஆர்ப்பாட்டத்தில் பேசும் பொழுது கிறிஸ்தவர்களையும் முஸ்லிம்களையும் இழிவாகப் பேசியிருப்பதும், வாக்கு சேகரிக்க வரும் வேட்பாளர்கள் மீது அமிலம் வீசுமாறு வன்முறையை தூண்டும் வகையில் உரையாற்றியிருப்பதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.


சாத்தானின் குழந்தைகள் என மத நம்பிக்கை ரீதியான தீமையானவர்கள் போல் தனக்கு ஓட்டு போடாதவர்களை விமர்சித்துள்ளார். நாட்டில் எந்த கட்சிக்கும் ஓட்டு போடுவது அவரவர் ஜனநாயக உரிமை. இதை பறித்து பாசிச அடக்குமுறை செய்வது போல் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போடாத காரணத்தினால் சைத்தானின் பிள்ளைகள் எனக் கூறுவது கடும் கண்டனத்திற்குரியது. இது ஒட்டுமொத்த சிறுபான்மை சமுதாய மக்களை கேவலப்படுத்தும் விதமாக உள்ளது. இதற்காக சீமான் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் பாஜகவின் திரைமறை அரசியல்வாதியாக வலம் வந்தால் முஸ்லிம் சமுதாய மக்களின் ஒன்று இரண்டு வாக்குகள் கூட வருங்காலங்களில் நாம் தமிழர் கட்சிக்கு கிடைக்காது. மேலும் இதுதொடர்பாக தமிழக அரசும், தமிழக காவல்துறையும் இப்படி இறை நம்பிக்கையான விஷயத்தை மத உணர்வை தூண்டும் வகையிலும், சமுதாய மக்களை இழிவுபடுத்தும் வகையிலும் பேசும் சீமான் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு முஸ்லிம் சமுதாய மக்களின் கோரிக்கையாக யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தமது அறிக்கையில்  பீமநகர் ரபீக் வலியுறுத்தியுள்ளார்.

Post a Comment

0 Comments