BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** முதல்வருக்கு பதிவு தபால் மூலம் கோரிக்கைகள் அனுப்பிய தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர்

முதல்வருக்கு பதிவு தபால் மூலம் கோரிக்கைகள் அனுப்பிய தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர்

 தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர்கள் கூட்டமைப்பு சார்பில் சுமார் 150 க்கு மேற்பட்ட தொழில் சங்கங்கள் இணைந்து தமிழக அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை முறையிட்டு வருகிறது அந்த வகையில் இன்று காலை தலைமை தபால் நிலையத்தில்  தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர்கள் கூட்டமைப்பினர் தங்களின் கோரிக்கைகளான சிறு தொழிற்சாலைகள் (LT-III-B-Tariff) மின் நுகர்வோர்களுக்கு நிலை கட்டணம் ஒரே பிரிவில் பழைய கட்டணமான ரூபாய் 35 க்கு மாற்றி அமைக்க தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பிக்க கோரியும்,  


சிறு தொழிற்சாலைகள்  (LT-III-B-Tariff) மின் நுகர்வோர்களுக்கு பீக் அவர் ஜார்ஜை உடனடியாக திரும்பப் பெறக் கோரியும், மின்சார வாரியத்தின் வழிகாட்டுதலில் ஏற்கனவே உள்ள குறு தொழில்களில் 12கே க்கு கீழ் உடனடியாக அமல்படுத்த கோரியும்,  மேற்கூரை கிள்ஸ் சோலார் நெட்வொர்க் கட்டணங்களை முழுமையாக ரத்து செய்ய தமிழ்நாடு அரசு ஆவணம் செய்யக்கோரியும், தமிழ்நாடு அரசு மல்டி இயர் டிராபியை உடனடியாக ரத்து செய்வதுடன் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறையின் இன்றைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு இரண்டு ஆண்டுகளுக்கு மின்சார மற்றும் இதர கட்டணங்களை உயர்த்துவதை தவிர்க்க கோருவது 






உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர்கள் கூட்டமைப்பு சார்பில் டிடிசியா சிறு குறு தொழில் சங்கங்களின் தலைவர் முகில் ராஜப்பா தலைமையில் சிறு குறு தொழில் சாலைகளின் உரிமையாளர்கள், நிறுவணங்களின் உரிமையாளர்கள் ஆகியோர் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு தங்களின் கோரிக்கைகளை பதிவு தபால் மூலம் அனுப்பி வைத்தனர்.

Post a Comment

1 Comments

  1. அருமை அருமை சிறு குரு மற்றும் நடுத்தர நிறுவனங்களை அழிவு பாதையில் கொண்டு சென்று விட்ட மின் கட்டணத்தை உடனடியாக தமிழக முதல்வர் மாற்றி அமைத்து தொழில்துறை நீரை பாதுகாக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்

    ReplyDelete