BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** IUML- AIKMCC சார்பில் நவம்பர்-23 இல் திருச்சியில் மெகா திருமண நிகழ்ச்சி

IUML- AIKMCC சார்பில் நவம்பர்-23 இல் திருச்சியில் மெகா திருமண நிகழ்ச்சி

திருச்சி தெற்கு மாவட்டம் சார்பாக திருமணத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதாக மாவட்டத் தலைவர் KMK.ஹபீபுர் ரஹ்மான் அறிவிப்பு!..

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் AIKMCC இணைந்து பவள விழா தேசிய மாநாட்டை முன்னிட்டு முதல் கட்டமாக 17 ஜோடிகளுக்கு சென்னையில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இரண்டாவது கட்டமாக திருச்சியில் மிக பிரம்மாண்டமாக மிக திருமணம் நடத்துவதற்கான பணிகள் தொடங்கப்பட்டு விண்ணப்பங்கள் பெற்று, அதை பரிசீரித்து அவை இறுதி செய்யப்பட்டுள்ளது.


இந்நிலையில் திருமணம் தொடர்பான ஆலோசனை மற்றும் தேதி அறிவிப்பு கூட்டம் திருச்சி அருண் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் AIKMCC-யின் தேசிய பொதுச் செயலாளர் சம்சுதீன் அவர்கள் கலந்து கொண்டு திருமண நிகழ்வு தொடர்பான ஆலோசனைகளை வழங்கி,தேசிய தலைவர் பேராசிரியர் அவர்களின் ஒப்புதலோடு இன்ஷா அல்லாஹ் 23/11/2023 வியாழக்கிழமை அன்று திருச்சி MAM பொறியியல் கல்லூரியில் மிக பிரம்மாண்டமாக திருமண நிகழ்வு நடைபெறும் என்று அறிவிப்பு செய்தார்கள்.


முன்னதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் KMK ஹபீபுர் ரஹ்மான் அவர்கள் வாழ்த்துரை வழங்கி, மெகா திருமண நிகழ்வுக்காக திருச்சி தெற்கு மாவட்டம் சார்பாக 50,000/- ரூபாய் வழங்கப்படும் என அறிவிப்பு செய்தார்கள். 



AIKMCC மெகா திருமண கன்வீனர் சமீர், தேசிய செயலாளர் அர்ஷத்,தமிழ்நாடு பொதுச் செயலாளர் ரஹீம் சாச்சல், மாநில செயலாளர் சஜீர், திருச்சி ஒருங்கிணைப்பாளர் ஹாரிஸ், தேசிய செயற்குழு உறுப்பினர் அப்துல் சமது, மாவட்ட பொருளாளர் ரயீஸ், 

ஜமாத்துல் உலமா சபையின் மாநில பொருளாளர் மௌலானா முகம்மது மீரான் ஹஜ்ரத் மற்றும்  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட துணைத் தலைவர் அலாவுதீன் ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.





முஸ்லிம் யூத் லீக் மாவட்ட செயலாளர் பேராசிரியர் மைதீன் அப்துல் காதர் மற்றும் மாவட்ட பொருளாளர் சேக் முகமது கௌஸ் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.

இந்நிகழ்வில் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் மற்றும் AIKMCC-யின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments