BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** மனநலம் சரியில்லாத மாற்றுத்திறனாளி பெண்மணிக்கு கண் சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை

மனநலம் சரியில்லாத மாற்றுத்திறனாளி பெண்மணிக்கு கண் சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை

2000 ஆம் ஆண்டு முதல் அக்டோபர் மாதம் இரண்டாவது வியாழக்கிழமை உலக பார்வை தினமாக கடைபிடிக்கப்படுகிறது. 

உலக பார்வை தினம் என்பது கண் ஆரோக்கியம் மற்றும் வழக்கமான கண் பரிசோதனையின் முக்கியத்துவத்தை மேம்படுத்தும் உலகெங்கும் உள்ள குருட்டுத் தன்மை மற்றும் பார்வை குறைபாட்டிற்கான தடுக்கக்கூடிய காரணங்களை நிவர்த்தி செய்ய வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைக்கப்பட்டு ஒரு தளமாக இந்த நிகழ்வு செயல்படுகிறது.


பார்வை தொடர்பான விழிப்புணர்வுகள்:

விஷன் 2020 திட்டத்தில் ஏழு விதமான கண் நோய்களால் எவரும் பார்வை இழக்கக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு அரசுகள் செயல்பட உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்துகிறது.

கண்புரை , கண்ணிமை உட்புறா டிராகோமா, கண்ணில் நீர் வழிதல் ,மங்களான பார்வை,சிறுவயதில் பார்வை குறைபாடு ,சர்க்கரை நோயால் விழித்திரை பாதிப்பு,கண்ணீர் அழுத்த நோய் இவை அனைத்திற்கும் முறையான சிகிச்சை முறைகளும் மருந்துகளும் கண்டறியப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.


இந்த உலக பார்வை தினத்தன்று ஓர் மகத்தான கண் சிகிச்சையை மேற்கொண்டுள்ளார்  மேக்ஸ்விஷன் கண் மருத்துவமனை கண் மருத்துவர் சிபு வர்க்கி இந்த சிகிச்சை பற்றிய செய்தியாளர் சந்திப்பு மருத்துவர் தெரிவித்ததாவது:-

64 வயதுடைய மனநிலை சரியில்லாத மாற்றுத்திறனாளி பெண்மணி ஒருவர் கண் பார்வை தெரியாமல் மிகவும் அவதிப்பட்டு உள்ளார்.அவரது குடும்பத்தினர் பார்க்காத கண் மருத்துவமனை இல்லை இவருடைய பார்வை தெரிவதற்கு, கண் மருத்துவர் சிபு வர்க்கியிடம் சென்ற பொழுது அவருடைய பார்வையை பெற நான் உதவுகிறேன் என்று தைரியம் கூறி, ஒரு குழந்தையை கையாளுவது போல் கண் பார்வை பாதிக்கப்பட்ட இந்த பெண்மணியை அதிநவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்டு கண் அறுவை சிகிச்சை செய்து இன்று தெளிவான பார்வையை வழங்கியுள்ளோம் .இந்த பெண்மணி பெரிதும் விரும்பி பார்க்கக்கூடிய ஒரே ஒரு செயல் தொலைக்காட்சி மட்டுமே. பல கண் மருத்துவமனைகள் இவரது கண் சிகிச்சையை மேற்கொள்ள இந்த கண் சிகிச்சை சிறப்பாக அமைய மயக்க மருந்து மருத்துவர் ராமமூர்த்தி தயங்கிய பொழுது, நம்மால் முடியும் என்று நினைத்தது மட்டுமல்லாமல் சிறப்பான கண் அறுவை சிகிச்சை செய்து வெற்றி பெற்றுள்ளார் மருத்துவர் சிபு வர்க்கி . 

மேலும் பங்களிப்பு இன்றி அமையாதது இந்த மாபெரும் கண் சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றதில் மேக்ஸி விஷன் குழுமம் பெருமை அடைகிறது.

Post a Comment

0 Comments