BREAKING NEWS *** ஈரான் அதிபர் மரணம் - பிரதமர் இரங்கல் *** கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு "முள்ளும் மலரும்" குறும்படம் திரையிடல்

கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு "முள்ளும் மலரும்" குறும்படம் திரையிடல்

கோவை மாவட்டம் காமராஜர் சாலை ஹோப் காலேஜ் பேருந்து நிறுத்தம் அருகில்  உள்ள கிளஸ்டர்ஸ் மீடியா கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு "முள்ளும் மலரும்"சமூக விழிப்புணர்வு குறும்படம் திரையிடல் மற்றும் மாணவ மாணவிகளுடனான கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது..


இந்த நிகழ்வில் கிளஸ்டர்ஸ் மீடியா கல்லூரியின் நிர்வாக இயக்குனர் அரவிந்த் கல்லூரி டீன்  குணாளன் மற்றும் ஒருங்கிணைப்பாளர் சூர்யா ஆகியோர் முள்ளும் மலரும் குறும்பட திரையிடல் நிகழ்வில் கலந்து கொண்டு  சிறப்பித்தனர்..



அதனைத் தொடர்ந்து கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு முள்ளும் மலரும் குறும்படம் திரையிடப்பட்டது  இப்படத்தை சீயான் புரொடக்க்ஷன்ஸ்  யாசின் மற்றும் ஏ கே ஈவன்ட்ஸ் அம்மு தயாரித்துள்ளனர்.



இப்படத்தில் ராம் பிரகாஷ், கஜலட்சுமி, கணியூர் கண்ணப்பதாசன், ரசீத், மணி மற்றும் பலர் நடித்துள்ளனர்..



இந்த 
படத்தின் கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை ஜெகதீஸ்வரன் ரகுகுமார் எழுதியுள்ளார். இயக்குனராக தாமரைக்கண்ணன், ஒளிப்பதிவாளராக யாசின், ஒலிப்பதிவு கோவை ஃபிலிம் ஸ்டுடியோ ராமகிருஷ்ணன் மற்றும் குழுவினர், இசை பசுபதி சீனிவாசன், துணை இயக்குனர் பார்த்திபன், ஒளிப்பதிவு உதவி பிரபு, தயாரிப்பு மேலாளர் யாதவ், மக்கள் தொடர்பு ஆண்டனி தாமஸ், ஸ்டில்ஸ் அருண் அஸ்வின் ஜோன்ஸ் ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.



கல்லூரியில் நடைபெற்ற திரையிடு நிகழ்வில் நடிகர் ராம்பிரகாஷ், எழுத்தாளர் ஜெகதீஸ்வரன் ரவிக்குமார், தயாரிப்பாளர் யாசின் மற்றும் தேசிய விருது பெற்ற குறும்படத்தின் நடிகரும் மாற்றம் அமைப்பின் நிர்வாகியுமான ஆர். ஏ. தாமஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு தங்களின் குறும்படம் மற்றும்  சினிமா அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்..



மேலும் இக்குறும்படத்தை பார்த்த கல்லூரியின் டின் குணாளன் அவர்கள் மாணவர்கள் மத்தியில் பேசுகையில்  சமூகத்தில் நடக்கும் அவலங்களை படத்தின் வாயிலாக எடுத்துக்காட்டியதை பாராட்டி அதுபோன்ற சமூக நலன் சார்ந்த படைப்புகளை  மாணவர்கள் உருவாக்க வேண்டும் என்று கூறினார் குறும்பட திரையிடலுக்கு பிறகு நிகழ்வில் கலந்து கொண்ட மாணவ மாணவிகள் பட குழுவினருடன் கலந்துரையாடினர் இதில் பட குழுவினர் பல்வேறு மாணவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்தனர்  நிகழ்வின் முடிவில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தும் விதத்தில் மர கன்றுகள் வழங்கப்பட்டது

Post a Comment

0 Comments