BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** "முல்லும் மலரும்" சமூக விழிப்புணர்வு குறும்படம் திரையிடும் நிகழ்வு

"முல்லும் மலரும்" சமூக விழிப்புணர்வு குறும்படம் திரையிடும் நிகழ்வு

 நாமக்கல் மாவட்டத்தில் உள்ள டிரினிட்டி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முல்லும் மலரும்  சமூக விழிப்புணர்வு குறும்படம் திரையிடல் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடும் நிகழ்வு நடைபெற்றது..


நாமக்கல் கோவை ஈரோடு மற்றும் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் ஒன்றினைந்து முல்லும் மலரும் என்கிற சமூக விழிப்புணர்வு குறும்படத்தை எடுத்துள்ளனர்..


இப்படத்தின் கரு இன்று சமூகத்தில் நடைபெற்று வரும் ஏற்ற தாழ்வு மற்றும் மாணவர்கள் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பர்ஸ்ட் பிரிவியூ நிகழ்வு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள டிரினிட்டி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது இந்நிகழ்வில் டிரினிட்டி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சேர்மேன் திரு.K.. நல்லுசாமி நிர்வாக இயக்குனர் திருமதி.S. அருணா செல்வராஜ் செயலாளர் திரு. S.செல்வராஜ் மற்றும் கல்லூரியின் முதல்வர் முனைவர். M. R.லக்ஷ்மிநாராயணன் உள்ளிட்டோர்  கலந்து கொண்டு  சிறப்பித்தார்கள்..




அதனை தொடர்ந்து முல்லும் மலரும் குறும்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு முல்லும் மலரும் குறும்படம் திரையிடப்பட்டது திரையிடு நிகழ்வுக்கு பிறகு மாணவிகள் படத்ததை பற்றி விமர்சனம் மற்றும் பட குழுவினருடன் கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது இப்படம் சியான் புரொடக்ஷன்ஸ் மற்றும்                    A.K.இவன்ட்ஸ் தயாரிப்பில் யாசின் மற்றும் அம்மு ஆகியோர் தயாரித்துள்ளனர் இப்படத்தில் நடிகர்கள் ராம் பிரகாஷ்  கஜலட்சுமி கணியூர் கண்ணப்பதாசன் ரஷீத் மணி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்             கதை திரைக்கதை வசனத்தை ஜெகதீஸ்வரன் ரகு குமாரும் இயக்குனராக தாமரை கண்ணனும் துணை இயக்குனராக பார்த்திபன் ஒளிப்பதிவு யாசின் ஒளிப்பதிவு உதவி பிரபு இசையை பசுபதி சீனிவாசன் சவுண்ட் என்ஜினீயர் ராமகிருஷ்ணன் தயாரிப்பு மேலாளராக யாதவ் ராமன் உள்ளிட்டோர் செய்துள்ளனர்..



இந்நிகழ்வில்  சிறப்பு அழைப்பாளராக தேசிய விருது பெற்ற குறும்படத்தின் நடிகரும் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் மாற்றம் அமைப்பின் நிர்வாகியுமான ஆர்.ஏ.தாமஸ் கலந்து கொண்டு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்டு நிகழ்வில் கலந்து கொண்டு முல்லும் மலரும் படத்தை பார்த்து பட குழுவினருக்கு பாராட்டுக்களை தெரிவித்தார் இந்நிகழ்வில் முல்லும் மலரும் படக்குழுவினர்  கல்லூரி பேராசியர்கள் உதவி பேராசியர்கள் திரளான மாணவ மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் நிகழ்வின் முடிவில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் மற்றும் மாற்றம் அமைப்பின் சார்பில் பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் மக்கும் வகையிலான பைகள் வழங்கப்பட்டது இப்பைகளை மாணவிகளுக்கு கல்லூரியின் முதல்வர் முனைவர் M. R. லக்ஷ்மி நாராயணன் அவர்கள் வழங்கினார்

Post a Comment

0 Comments