தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் பேரில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்களின் அறிவுறுத்தலின் அடிப்படையில் மனித உரிமைகள் தினமாக இன்று 28 வது வார்டில் "பகுதி சபா" கூட்டம் மாமன்ற உறுப்பினர் அ.பைஸ் அகமது MC, தலைமையில் நடைபெற்றது.
மாநகராட்சியின் பொறியியல், வரி வருவாய், சுகாதார பணிகள் துறையை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
28 வது வார்டில் உடனடியாக மேற் கொள்ள வேண்டிய பணிகள் மற்றும் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருக்கும் பணிகள் குறித்து விரிவான ஆலோசனை மேற்கொண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு அரசிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் திமுக 28வது வட்ட செயலாளர் அண்ணன் அம்ஜத் மற்றும் 28 வது வட்ட திமுக நிர்வாகிகள், மமக தென்னூர் பகுதி தலைவர் ஜாபர் அலி உள்ளிட்ட நிர்வாகிகள், அரசியல் மற்றும் இயக்கங்களின் நிர்வாகிகள், வார்டு பொதுமக்கள், பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்
0 Comments