NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** திருச்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஆலோசனை கூட்டத்தில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்த தீர்மானம்

திருச்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஆலோசனை கூட்டத்தில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்த தீர்மானம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி  மாவட்டத்தின் செயல்வீரர்கள் கூட்டம் திருச்சி மாவட்ட தலைமையகத்தில்  நடைபெற்றது.மாவட்ட தலைவர் குலாம் தஸ்தஹீர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாநில செயலாளர் அல் அமீன், TNTJ பேச்சாளர் ஹமீதுர் ரஹ்மான் ஆகியோர் பேச்சாளர்களாக பங்கேற்றனர்.


டிசம்பர் முதல் பிப்ரவரி வரை மூன்று மாத கால செயல்திட்டமாக 'போதைக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம்' நடத்துவது என முடிவுசெய்யப்பட்டது.



இந்த கூட்டத்தில் பேசிய TNTJ மாநில செயலாளர் அல் அமீன் அவர்கள், போதைக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரங்களை மக்களிடம் வீரியமாக கொன்டு சேர்க்க வேண்டும். போதைக்கு எதிரான விழிப்புணர்வை மக்களிடம் சேர்த்து இச்சமுதாயத்தை அவற்றிலிருந்து பாதுகாக்க வேண்டும் என பேசினார்.



மேலும் இந்த கூட்டத்தில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டத்தின் சார்பாக 'அல்-ஹிக்மா' அகாடமி என இலவச அரசு தேர்வுகளுக்கான பயிற்சி மையம் துவங்கப்பட்டதற்கான அறிவிப்பு வழங்கப்பட்டது.



இந்த கூட்டத்தில்,  மாவட்ட செயலாளர் ஜாஹீர்,  பொருளாளர் லால் பாஷா,  துணை.தலைவர் காஜா, துணை செயலாளர்கள், உமர், பிலால், கனி, மாலிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Post a Comment

0 Comments