BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** வரதட்சணை கொடுமை எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி

வரதட்சணை கொடுமை எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி

 சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் மற்றும் மாவட்ட சமூக நலத்துறை இணைந்து உலக வரதட்சணை கொடுமை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் தலைமையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது...


இந்த விழிப்புணர்வு பேரணியில் மாவட்ட ஆட்சியர்  பிரதீப் குமார் மற்றும் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி நித்யா அவர்கள் தலைமையிலும் இந்த நிகழ்ச்சியில் உறுதிமொழி எடுத்து கொடியசைத்து விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தனர்..


இந்த பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து  தொடங்கி மத்திய பேருந்து நிலையம் மற்றும் கலையரங்கம் திருமண மண்டபத்தில் நிறைவடைந்தது..பேரணி  நிறைவடையும் பொழுது சில்ட்ரன் டிரஸ்ட் ஒருங்கிணைப்பாளர் அவர்கள் நன்றி உரை கூறினார்..



இந்த பேரணிக்கு வருகை புரிந்த  ஜமால் முகமது கல்லூரி மாணவர்கள் ஐசிடிஎஸ் பணியாளர்கள் சமூக நலத்துறை பணியாளர்கள் காவல்துறை பணியாளர்கள் அனைவரையும் இந்த நிகழ்ச்சிக்கு ஒத்துழைப்பு தந்ததற்கு நன்றி உரை கூறினார்..

இந்த பேரணியில் மொத்தம் 150 நபர்கள் கலந்து கொண்டனர்

Post a Comment

0 Comments