// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** ஜெயலலிதா உருவ படத்திற்கு அந்தநல்லூர் தெற்கு ஒன்றிய அதிமுகவினர் மலரஞ்சலி

ஜெயலலிதா உருவ படத்திற்கு அந்தநல்லூர் தெற்கு ஒன்றிய அதிமுகவினர் மலரஞ்சலி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 7 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சி அதிமுக புறநகர் வடக்கு மாவட்டம், அந்தநல்லூர் தெற்கு ஒன்றியம் குளுமணியில் அமைந்துள்ள புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சிலை முன்பு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவப் படத்திற்கு, தெற்கு மாவட்ட செயலாளர் பரஞ்சோதி தலைமையில், அமைப்பு செயலாளர் வளர்மதி முன்னிலையில் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. 


அதனை தொடர்ந்து பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்,  அன்னதானம் வழங்கப்பட்டது.  


அந்தநல்லூர் தெற்கு ஒன்றிய செயலாளர் கோப்பு நடராஜ் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் அந்தநல்லூர் தெற்கு ஒன்றிய இணை செயலாளர் சுபிதா மதிவாணன்,



ரெங்கராஜ், காமாட்சி, கணேஷ், தவசி, அங்குதாஸ், அன்பரசு உள்பட நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Post a Comment

0 Comments