// NEWS UPDATE *** தனது வாழ்க்கை அனுபவங்களை சுயசரிதையாக எழுதும் நடிகர் ரஜினிகாந்த்.. பல ஆண்டுகளாக பேசப்பட்ட இந்த முயற்சி இப்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.. மைசூரில் தங்கி புத்தகத்தை எழுதுவதில் கவனம் செலுத்தி வரும் ரஜினி, இந்த ஆண்டுக்குள் புத்தகத்தை வெளியிட திட்டம்.. *** நவீன கையடக்க ஓயன்ஸ் ECG கருவி அறிமுக நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது

நவீன கையடக்க ஓயன்ஸ் ECG கருவி அறிமுக நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது

இதயத் துடிப்பை பதிவு செய்து கைபேசிக்கு அனுப்பக்கூடிய நவீன கையடக்க ஓயன்ஸ் ECG கருவியின் அறிமுக  நிகழ்ச்சி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் நேற்று நடைபெற்றது. வி.ஆர். டெல்லா நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி மணிகண்டராமன் ராமபத்திரன் கருவியை அறிமுகம் செய்து வைத்து கருவியின் சிறப்பம்சங்கள் குறித்து விளக்கிப் பேசினார். 


அதில், உள்ளங்கை அளவுள்ள இந்த சாதனமானது எங்கும் எளிதில் எடுத்து செல்லக்கூடியதாகும். AI நுட்பத்தில் செயல்படக்கூடியது. இணைய வழி உதவியுடன் நேரடியாக ECG ஒளிபரப்பு செய்து உடனடியாக அறிக்கை தரக்கூடியதாகும் என தெரிவித்தார்.







 இந்த நிகழ்வில் ஹர்ஷமித்ரா கேன்சர் இன்ஸ்டடியூட் மருத்துவர் கோவிந்தராஜன், மருத்துவர் சிவம்,பிரண்ட்லைன் மருத்துவமனையின் நிறுவனர் ராதாகிருஷ்ணன், மாருதி மருத்துவமனையின் மருத்துவர் சிலம்பரசன்,மருத்துவர் மோகன், மருத்துவர் சசி பிரியா உள்பட மருத்துவத் துறையினர் திரளானோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments