// NEWS UPDATE *** பள்ளியில் ஆசிரியை வெட்டிக்கொலை சேலம், ஓமலூர் அருகே கமலாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்திற்குள் உள்ளே புகுந்து ஆசிரியை ஸ்ரீவித்யா வெட்டி படுகொலை குடும்ப பிரச்னை காரணமாக அவரது கணவர் விஜயமுருகனே வெட்டிக் கொலை செய்த‌தாக தகவல்; தப்பியோடிய அவரை போலீசார் தேடி வருகின்றன *** திருச்சியில் மாவட்ட அளவிலான யோகா விளையாட்டு போட்டி

திருச்சியில் மாவட்ட அளவிலான யோகா விளையாட்டு போட்டி

திருச்சி ரெட்டை வாய்க்கால் அமிர்த வித்யாலயம் பள்ளியில்  மாவட்ட அளவிலான யோகா விளையாட்டு போட்டி இன்று  துவங்கியது. 30 பள்ளிகளில் இருந்து 340க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். 


பொதுப் பிரிவு மற்றும் சிறப்பு பிரிவு என மாணவ, மாணவிகளுக்கு தனி தனியாகபோட்டிகள் நடத்தப்பட்டு மொத்தம் 100க்கு மேற்பட்ட பரிசுகள் கொடுக்கப்படுகின்றன.மாணவர்கள் செய்கின்ற ஆசனங்களுக்கு ஏற்றவாறு மதிப்பெண் வழங்கப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகின்றன. மாலை 4 மணியளவில் நடைபெறும் பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளியின் முதல்வர்  உஷாரா ராகவன் அவர்கள் பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்க உள்ளார். 


மாணவர்களை அழைத்து வந்த யோகா ஆசிரியர்களுக்கு நினைவு பரிசுகளையும், அதிக பரிசுகளை வென்ற பள்ளிகளுக்கு சுழல் கோப்பையும் வழங்க உள்ளனர்....

நிருபர் JS மகேஷ் 

Post a Comment

0 Comments