// NEWS UPDATE *** ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு. அதிமுக - பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் +++++++++++++++++++++++ பிகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை *** திருச்சியில் கேப்டன் விஜயகாந்துக்கு திருவுருவ சிலை நிறுவ வேண்டும் - நாடகக் கலைஞர்கள் ஆட்சியரிடம் கோரிக்கை மனு

திருச்சியில் கேப்டன் விஜயகாந்துக்கு திருவுருவ சிலை நிறுவ வேண்டும் - நாடகக் கலைஞர்கள் ஆட்சியரிடம் கோரிக்கை மனு

 மறைந்த புரட்சிக் கலைஞர் டாக்டர் கேப்டன் விஜயகாந்த் சினிமா துறை, சமூக சேவை, அரசியல் துறை என மூன்று துறையிலும் செய்த சேவையானது அளவற்றது. நாட்டுப்புற நாடக கலைஞர்களுக்கு ஆசானாக திகழ்ந்தவர். 


அதன் அடிப்படையில்  மறைந்த புரட்சிக் கலைஞர் டாக்டர் கேப்டன் விஜயகாந்த்திற்கு திருச்சியில் திருவுருவ சிலை நிறுவ வேண்டும் என்று பன்முக கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பு சார்பில் நிறுவன தலைவர் வேல்முருகன் வழிகாட்டுதல் படி,



ஒருங்கிணைப்பாளர் பகுருதீன் அலி அகமது, பொருளாளர் பாலமுருகன் ஆகியோர் ஒருங்கிணைப்பில் திருச்சி மாவட்ட தலைவர் அன்வர் தீன், திருச்சி மாவட்டத்தின் செயலாளர் ஐயப்பன் ஆகியோரின் தலைமையில் நாட்டுப்புற நாடக கலைஞர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இன்று திருச்சி மாவட்ட ஆட்சியரிடத்தில் கோரிக்கை மனு அளித்தனர். 

இந்நிகழ்வில் பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பினர் பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments